சயின்ஸ் குரூப் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் இருந்த மாணவன் டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குணால் ராய் என்ற 16 வயது மாணவன், 10ஆம் வகுப்புக்கு பின்னர், தனது நண்பர்களுடன் சேர்ந்து சயின்ஸ் குரூப் எடுக்க விரும்பு இருக்கிறான். ஆனால், அறிவியல் பாடப்பிரிவு கிடைக்காத காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மாணவர் எடுத்த விபரீத முடிவு: டெல்லியின் நங்லோயின் ராணி கேரா பகுதியைச் சேர்ந்த சிவசந்த் ராயின் மகன் குணால். இவரது பள்ளியில் உயர்கல்வியில் அறிவியல் பாடப்பிரிவு இல்லை. எனவே, இவரது நண்பர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்க முயற்சி செய்துள்ளார்கள்.


நண்பர்களுடன் சேர்ந்து அறிவியல் பாடப்பிரிவு படிக்க வேண்டும் என்று எண்ணிய குணால், தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்ந்திருக்கிறார். கலை பாடப்பிரிவில் தனது கல்வியைத் தொடர அவரது தந்தை அவருக்கு ஆலோசனை வழங்க முயற்சித்த போதிலும், குணால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.


ஒரு கட்டத்தில் மனமுடைந்த அவர், பள்ளி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "அவரது உடல் RTRM மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றார்.


தொடரும் தற்கொலை சம்பவங்கள்: சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களாக சக ஊழியர்கள் உருவ கேலி செய்த காரணத்தால் அந்த இந்த விபரீத முடிவை எடுத்தார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.


இதையும் படிக்க: சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?