நெய்வேலி என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத இயந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் நடைபெற்று வருகிறது.  தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


பயிர்களின் அறுவடைக்கு பின், கால்வாய் வெட்ட வேண்டும் எனவும், கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும் என்றுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.


விளைந்த பயிர்களை அழித்து என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதை கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி  வலியுறுத்தியுள்ளார்.


இப்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சி.வி சண்முகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவது மக்களுக்கு எதிரான செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.


DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!


LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!