Crime: ஆதார்  கார்டு இல்லாததால் மருத்துவமனையில் தமிழக பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததால் அவர் குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த் பெண் கஸ்தூரி. இவரது கணவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு உறவினர் எந்த உதவியும் செய்ய முன்வாவில்லை என கூறப்படுகிறது. எனவே இவர் தனது 6 வயது பெண் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு குடிப்பெயர்ந்து வந்தார். அங்கு பாரதி நகர் என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி தீடீரென ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கப்பக்கத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கர்ப்பிணிகள் கர்நாடக அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற ஆதார் கார்டு பெற்றிருக்க வேண்டும். ஆனால், தமிழக பெண்ணான கஸ்தூரியிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த ஆவணமும்  இல்லை எனக் கூறப்படுகிறது.


எனவே, அந்த பெண்ணுக்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பிரசவம் பார்க்க மறுத்துவிட்டனர். ஆனால், கஸ்தூரி அந்த இடத்தில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மருத்துவர்கள் மனம் இரங்கவில்லை. அக்கம்பக்கத்தினர் சொல்லி பார்த்தும் மருத்தவர்கள் பிரசவம் பார்க்க மறுத்துவிட்டனர். எனவே அவரை இரவு 10 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரது 6 வயது குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டனர்.


பிறகு காலையில்  அவரது வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது காலடியில் பிறந்த குழந்தையும் இறந்து கிடந்தது என கூறப்படுகிறது. இதனை பார்த்த அவர்கள் பெறும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு கஸ்தூரிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு இதனை அறிந்த மருத்துவமனை  அதிகாரி மஞ்சுநாத் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீணா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 


அப்போது நடந்த விவரத்தை அவர்கள் தெரிவித்தனர். பின்பு அவர் கூறியதாவது, " முதலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பின்னரே ஆவணங்களை கேட்டிருக்க வேண்டும். மருத்துவ உதவி தேவைப்பட்டால் மட்டுமே கர்ப்பிணியிடம் ஆதார் கார்டு இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தனர். 


மேலும், சம்பவத்தன்று பணியில் இருந்த மருத்துவர் உஷா மற்றும் பிரசவ வார்டில் பணியில் இருந்த நர்சுகள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். பிறகு கஸ்தூரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதற்கிடையே தாய், தந்தையை இழந்த 6 வயது குழந்தை பெங்களூருவில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.


இந்நிலையில், அரசு மருத்துவமனையில் நடந்த அவலத்துக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.






இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் பதவி விலக வேண்டும். இதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.