சமீபத்தில், இந்திய பிரதமர் மோடியை ரஷிய அதிபர் புதின் புகழ்ந்து பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, இந்திய மக்களை புதின் புகழ்ந்து பேசியிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மாறி வரும் உலக அரசியல் சூழலில் புதின் இப்படி பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியர்கள் திறமைமிக்கவர்கள் என்றும் இலக்கை நோக்கி செல்பவர்கள் என்றும் புதின் பாராட்டியுள்ளார். நேற்று, ரஷிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள விளாடிமிர் புதின், "வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியாவுக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு, ஆற்றல் உள்ளது.
இந்தியாவைப் பார்ப்போம். உள்நாட்டு வளர்ச்சிக்கான அத்தகைய உந்துதலைக் கொண்ட திறமையான, மிகவும் உந்துதல் கொண்ட மக்கள். அது (இந்தியா) நிச்சயமாக சிறந்த முடிவுகளை அடையும். இந்தியா அதன் வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும். எந்த சந்தேகமும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் மக்கள் இருக்கின்றனர். இப்போது, அது அவர்களுக்கு சாத்தியம்" என்றார்.
ஆப்பிரிக்காவில் காலணி ஆதிக்கம், இந்தியாவின் ஆற்றம் வளம், ரஷியாவில் எப்படி தனித்துவமான நாகரீகம் மற்றும் கலாசாரம் உள்ளது என்பது குறித்து புதின் விளக்கி பேசினார். ஆப்பிரிக்காவில் மேற்கத்திய பேரரசுகள் கொள்ளையடித்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய புதின் அவர், "ஆப்பிரிக்காவில் கொள்ளையடித்ததால்தான் காலணி சக்திகளில் தற்போது செழுமை ஏற்பட்டுள்ளது. அது எல்லோருக்கும் தெரியும். ஆம், உண்மையில், ஐரோப்பாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை மறைக்கவில்லை. அப்படித்தான். இது கணிசமான அளவிற்கு ஆப்பிரிக்க மக்களின் துக்கம் மற்றும் துன்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நான் முழுமையாக அப்படி சொல்லவில்லை. ஆனால், குறிப்பிடத்தக்க அளவிற்கு காலனித்துவ சக்திகளின் செழிப்பு அப்படிதான் கட்டப்பட்டது. இது ஒரு வெளிப்படையான உண்மை. நிச்சயமாக, கொள்ளை, வியாபாரம் ஆகியவற்றால்தான்" என்றார்.
ரஷிய கலாசாரம் குறித்து பேசிய அவர், "ரஷ்யா, பல தேசியங்களை கொண்ட நாடு. பல மதங்களை கொண்ட நாடு. தனித்துவமான நாகரீகம் மற்றும் கலாச்சாரம் இங்கு இருந்தது. இருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில், ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும். கிறிஸ்தவ மதத்தால் கண்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.