கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் நாட்டிலேயே மக்களின் நம்பகத்தன்மை பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக என்று லோக்கல் சர்க்கில்ஸ் (LOCAL CIRCLES) ஆய்வு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்கல் சர்க்கில்ஸ் என்பது சிறு மற்றும் குறு நிறுவனங்களில் அரசு கொள்கைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் தனியார் அமைப்பாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அந்தந்த மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து, நாடு முழுவதும் 17 மாநிலங்களின் 383 மாவட்டங்களில் உள்ள 38,991 தனிநபர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது. பங்கேற்றவர்களில் 67% பேர் ஆண்கள், 33% பேர் பெண்கள். நோய்த் தொற்று பரிசோதனை, கட்டுப்பாடு வழிமுறைகள், மருத்துவ கட்டமைப்பு, ஆக்ஸிஜன் விநியோகம், சிகிச்சைக்கான மருந்து கிடைப்பது போன்ற நடைமுறைகள் மூலம் கொரோனா இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கைகளில் உங்கள் மாநிலங்கள் எவ்வாறு செயல்பட்டது? என்ற கருத்துக்கணிப்பு ஆய்வை நடத்தினர்.
ஆய்வின் முடிவில், நாட்டிலேயே தங்கள் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாடு மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 58 சதவிதம் பேர் மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். பீகார், மேற்கு வங்கம் மாநிலங்களில் முறையே 20%, 17% பேர் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சற்று தாமதமாகத்தான் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை உருவெடுக்கத் தொடங்கியது. தற்போது, அதன் தினசரி பாதிப்பு 4,000 முதல் 5,000 என்றளவில் உள்ளது. 2021 மே மாதம் 3வது மற்றும் 4வது வாரங்களில் படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் மாநில அரசின் செயல்பாடுகள் திறம்பட இருந்ததாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 3120 பேரில் ஒருவர் கூட மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்று மதிப்பிடவில்லை.
கொரோனா இரண்டாவது அலையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாக 32% பேர் தெரிவித்துள்ளனர். நல்லமுறையில் செயல்பட்டது என 27% பேரும், ஏதோ செயல்பட்டது? என 27% பேரும் தெரிவித்துள்ளனர். 3% பேர் கருத்துக் கூற விரும்பவில்லை. தடுப்பு நடவடிக்கையில் முழுமையாக அரசு தோல்வியடைந்து விட்டது என ஒருவர் கூற கருத்துக் கூறவில்லை.
மேலும், வாசிக்க:
CVoter Mood Of Nation Survey: தடுப்பூசியை ஆழமாக நம்பும் மக்கள்; ABP சிவோட்டர் சர்வே தகவல்!