ஊழல், அத்தியாவசிப் பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்றவைகளை கொரோனா மருத்துவ உபகரணங்களை பொது மக்கள் தற்போது நாட்டின் மிகப்பெரிய  பிரச்சினையாக கருதுகின்றனர் என ஏபிபி-சி வோட்டர் சர்வே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  

2021 MOOD OF THE NATION கருத்துக்கணிப்பு முடிவுகளை  சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி செய்தி நிறுவனம் வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று  காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் நாடு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.   

இந்திய நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகிறது. இதில் மிக முக்கிய பிரச்சனையாக நீங்கள் கருதுவது என்ன? என்ற கேள்வியும் இடம் பெற்றது. 

c16 : There are many problems that our country is facing today. Which one according to you is the most important problem?  
Channel State Corruption Unemployment Family income/Poverty Rising prices Economic status
ABP Ananda WB 2.44 16.85 2 7.65 5.48
ABP Asmita Gujarat 12.83 16.26 2.91 10.22 3.02
ABP Majha Maharashtra 9.08 13.47 4.78 14.06 0.93
ABP Sanjha Punjab 11.8 26.47 5.37 8.23 0.42
ABP Tamil Tamil_Nadu 1.08 10.27 4.05 5.26 2.51
ABP_India All_India 6.88 18.17 4.6 10.37 2.27

 

c16 : There are many problems that our country is facing today. Which one according to you is the most important problem?  
Channel State Issues related to agriculture/farmers Epidemics such as corona etc. Others Can’t say TOTAL
ABP Ananda WB 0.45 42.36 19.9 2.87 100
ABP Asmita Gujarat 1.75 37.87 12.15 2.99 100
ABP Majha Maharashtra 4.84 40.5 7.53 4.81 100
ABP Sanjha Punjab 13.31 28.63 0.46 5.31 100
ABP Tamil Tamil_Nadu 10.42 44.84 11.64 9.93 100
ABP_India All_India 3.86 35.88 11.96 6.01 57.71

         

அகில இந்திய அளவில், கொரோனா மருத்துவ உபகரணங்கள் தேசம் சந்தித்துவரும் மிகப்பெரிய பிரச்சனை என்று 36 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மாநிலங்கள் அளவில் இந்த விகிதம் மாறுபடுகிறது. 

உதாரணமாக, கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் மாநிலங்களான தமிழகம் (44.84%), மேற்கு வங்கம் (42.36), மகாராஷ்டிரா (40) ஆகிய மாநிலங்களில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் மிகப்பெரும் பிரச்சனையாக காணப்படுகிறது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் 6 மாதங்களுக்கு மேலாக போராடும் விவசாயிகள் போராட்டம் அகில இந்திய அளவில்  மிகமுக்கிய  பிரச்சனையாக மக்கள் பார்க்கப்பட வில்லை என்பது இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய அளவில் வெறும் 3.86 சதவிகிதம் பேர் மட்டுமே விவசாயிகள் போராட்டத்தை தீவிர பிரச்சனையாக கருதுகின்றனர்.  பஞ்சாப் (13.31), தமிழ்நாடு (10.41) ஆகிய மாநிலங்கள் மட்டுமே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்   மிகமுக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. 

வேலைவாய்ப்பின்மை:   

இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட அநேக கருத்துக் கணிப்புகளில், பொது மக்களுக்கு வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. உண்மையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்  வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகள் அடிப்படையில் பெரும்பாலான இளைஞர்கள் வாக்களித்ததாக  கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் 80% இளைஞர்கள் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மையை முக்கிய பிரச்சனையாக கருதியிருந்தனர். 

 ஆனால், தற்போது, வேலைவாய்ப்பின்மை மிக முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அகில இந்திய அளவில் 18.17 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளது.  

2020-21-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.11 சதவீதமாகும். 2019-20 ஆம் ஆண்டுக்கான  வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.27 சதவீதமாகும். 1991ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5.55 சதவிகிதமாக இருந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளை விட இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் கடும் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது. ஊழல், அத்தியாவசிப் பொருட்களின் விலையேற்றம் போன்றவைகள் மிகமுக்கிய பிரச்சனையாக கருதப்படவில்லை.