இந்தியாவில் முதன் முறையாக கொரோனாவின் திரிவு வகையான ஒமைக்ரான் பி.ஏ.4 (BA.4 subvariant of the Omicron ) வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 


உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி இரண்டாடுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், வைரஸ் புதிய உருவில் மாறி கொண்டே இருக்கிறது. அப்படி, கொரோனாவின் திரிபு வைரசான ஒமைக்ரான் பி.ஏ. 4 (BA.4 subvariant of the Omicron )வைரஸ் இந்தியாவில் முதல் முதலில் பதிவாகியுள்ளது.


தெலங்கான மாநிலம் ஐத்ராபத்தில் ஒரு நபருக்கு ஓமிக்ரோன் பி.ஏ.4 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக அம்மாநில மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐதராபாத் விமான நிலையத்தில் அந்த நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பி.ஏ. 4 வைரஸ் தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது..







 Indian SARS-CoV-2 Consortium on Genomics (INSACOG) அமைப்பு இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பி.ஏ.4 வைரஸ் பதிவாகியுள்ளதாக உறுதி செய்துள்ளனர். 






ஒமைக்ரான் பி.ஏ.4 வைரஸ்  பாதிக்கப்பட்டவரின் சாம்பிள் genome sequencing- பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்த புதிய வகை கொரோனா வேரியண்ட், மற்ற கொரோனா வைரஸ் திரிபு வகைகளை விட கடுமையாகவும், தடுப்பூசிகளின் திறனுக்கும் கட்டுப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போது கொரோனா வைரஸ் குறையும் என்று எதிப்பார்ப்பு எல்லா நாட்டு அரசுகளிடமும் இருக்கிறது.


 


Nenjukku Neethi Review: நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி... எப்படி இருக்கிறது படம்? உள்ளதை சொல்லும் விமர்சனம்!


Kanimozhi on JIPMER Hindi Imposition | ஏன் இந்த ஹிந்தி மொழி வெறி?அமித்ஷாவுக்கு கனிமொழி பதிலடி


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண