தமிழகம் : 



  • தெற்காசியாவிலேயே முதலீடுகள் செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு : தொழில் முனைவோர் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு 

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி : தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு 

  • பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் :  மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல் 

  • பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி சென்னையில் காங்கிரசார் போராட்டம் 

  • கூட்டாட்சி தத்துவத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு மாநில உரிமைகளின் வலிமையை உணர்த்தும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 


இந்தியா :



  • காஷ்மீர் பிரிவினைவாத இயக்க ஆதரவாளர் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி என் ஐ ஏ நீதிமன்றம் தீர்ப்பு 

  • காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவிற்கு ஒராண்டு சிறை தண்டனை! - உச்சநீதிமன்றம் அதிரடி

  • இந்தியா முழுவதும் வாழும் 6 முதல் 59 மாதங்கள் வரையிலான வயதுகொண்ட 20 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை : தேசிய குடும்ப சுகாதாரம் கணக்கெடுப்பு 

  • விதிகளைப் பின்பற்றுங்கள்; அல்லது வெளியேறுங்கள்" – VPN சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எச்சரிக்கை


உலகம் : 



  • `இனி குடியரசுக் கட்சிக்கே எனது வாக்கு’ - ட்விட்டர் தளத்தில் அரசியல் பேசும் எலான் மஸ்க்!

  • பெட்ரோலை சேமிக்கும் விதமாக அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வரவேண்டாம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை 

  • சட்ட வரைவில் இந்தியர்களுக்கு வீட்டுரிமை இல்லை: அமெரிக்காவின் இனவெறியை தோலுரித்த CDPHR அறிக்கை


விளையாட்டு :



  • உலக குத்துச்சண்டை போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

  • குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

  • இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண