Coronavirus Cases Today: இந்தியாவில் தொடர்ந்து குறையும் ஒருநாள் கொரோனா தொற்று! பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 15 ஆயிரத்து 44 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Continues below advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2259 நபர்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது. 

Continues below advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 323ஆக அதிகரித்துள்ளது.


நாடு முழுவதும் தற்போது 15 ஆயிரத்து 44 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (மே.19) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2364ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று 2259ஆக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதையும் படிங்க:  மயிலாடுதுறை: பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை

புதிய வகை கரோனா

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக கொரோனாவின் புதிய திரிவு வகையான ஒமைக்ரான் பி.ஏ.4 (BA.4 subvariant of the Omicron) வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

 

தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் ஒரு நபருக்கு ஓமிக்ரோன் பி.ஏ.4 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக அம்மாநில மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் விமான நிலையப் பயணிகளிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அந்நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், Indian SARS-CoV-2 Consortium on Genomics (INSACOG) அமைப்பும் இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பி.ஏ.4 வைரஸ் பதிவாகியுள்ளதாக உறுதி செய்துள்ளது. 

இதையும் படிங்க: Nenjukku Neethi Review: நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி... எப்படி இருக்கிறது படம்? உள்ளதை சொல்லும் விமர்சனம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola