தமிழ்நாடு: 


முதல்வர் முக ஸ்டாலின் இன்று துபாய் பயணம். 


பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு. அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தல் 


வேலூர்: பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கும் மாற்றம்: விரைவில் தண்டனை என சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி.


தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை: ஈபிஎஸ் பேட்டி 


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக  மழை 



இந்தியா 


பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: பாதுகாப்புத்துறை தகவல்


மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட இடத்தில் அம்மாநில முதல்வர் மம்தா இன்று ஆய்வு: சிபிஐ விசாரிக்க பாஜக வலியுறுத்தல் 


கேரளா: அதிவிரைவு ரயில் சேவை திட்டத்திற்கு  எதிர்ப்பு, நில அளவை எல்லை, கற்களை அகற்றி காங்கிரஸ் போராட்டம்.


ரயில்வேயில் 1.49 லட்சம் காலிப் பணியிடங்கள்: ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 


இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்:  ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை விட்டு விலகுமாறு முழக்கம்.


சினிமா:


பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கு: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் 


துபாய் எக்ஸ்போ 2022 வில் “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்” படத்திற்கு எழுந்து நின்று பார்வையாளர்கள் பாராட்டு. 


பிரபல நடிகையான திரிஷா மெக்சிகோவிற்கு சுற்றுலா: புகைப்படங்கள் வைரல் 


நிதி கொடுத்து உதவும் திட்டத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம். 


உலகம் 


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷியாவுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா. 


28வது நாளாக தொடரும் ரஷ்யா உக்ரைன் போர் - வெடிகுண்டு தாக்குதலுக்கு ரஷிய பத்திரிக்கையாளர் உயிரிழப்பு.


அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்.



விளையாட்டு 


பெண்கள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு


மும்பையில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்காது - ரோகித் சர்மா பேட்டி