இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற Mi17 V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.


 






காட்டேரி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.இந்த சூழலில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக  மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவசரமாக கூடியது. அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 






இதனையடுத்து அவர் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருக்கும் பிபின் ராவத்தின் வீட்டுக்கு சென்று ராவத் மகளை சந்தித்தார். மேலும் அவர் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!


Coonoor Chopper Crash: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: ராணுவ உயர் அதிகாரி பலி என தகவல்!


Watch Video | முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து... முதலில் நேரில் பார்த்தவர் என்ன சொல்கிறார்?


Coonoor Chopper Crash: பிபின் ராவத், மற்றும் ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் என்ன?