குன்னூர் அருகே இந்திய விமான படைக்குச் சொந்தமான எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்தார்.


எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள்


Mi-17V5 என்பது இந்திய விமானப் படையால் பயன்படுத்தப்படும் நவீன போக்குவரத்து ஹெலிகாப்டர். Mi-17V- என்பது Mi-8/17 வகை ஹெலிகாப்டர்களில் உள்ள ஒரு இராணுவப் போக்குவரத்து வகையாகும். இது ரஷ்ய நாட்டின் நிறுவனமான கசான் ஹெலிகாப்டர்களால் தயாரிக்கப்படுகிறது.


இது சரக்குகளை கொண்டு செல்ல வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது உலகின் மிகவும் மேம்பட்ட போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாகவும் பயன்படுகிறது. இதில் 36 பேர் பயணிக்கலாம். சரக்கு ஏற்றுமதி மற்றும் பயண போக்குவரத்து மட்டுமின்றி, கான்வாய் எஸ்கார்ட், ரோந்து மற்றும் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் பயன்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் வான் தாக்குதல் படைகளையும் உளவுப் படைகளையும் வீழ்த்தும் திறன் கொண்டது.


 



இந்திய விமானப் படை இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி சரக்குகளை ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்கிறது. ராணுவ ஆபரேஷன் நடைபெறும் பகுதிகளில் துருப்புக்களை நிலைநிறுத்துகிறது.


 


இந்த வகை ஹெலிகாப்டர்களை கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஏரோ இந்தியா ஷோவின்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆர்டர் செய்தது.


டிசம்பர் 2008இல் 80 ஹெலிகாப்டர்களுக்குரிய 1.3 பில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தை ரஷ்யாவிற்கு இந்தியா வழங்கியது. இந்த ஹெலிகாப்டர்களின் டெலிவரி 2011இல் தொடங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 36 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டன.


ஜூலை 2018ஆம் ஆண்டு ரஷ்ய பாதுகாப்புத் துறையான  Rosoboron export, கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி மொத்த ஹெலிகாப்டர்களையும் இந்தியாவிற்கு வழங்கியது. இந்திய விமானப்படையானது Mi-17V-5 ஹெலிகாப்டர்களுக்கான பழுது மற்றும் மாற்றியமைக்கும் வசதியை ஏப்ரல் 2019ஆம் ஆண்டு தொடங்கியது.



சோவியத் வடிவமைத்த ரஷ்ய ஹெலிகாப்டர் இரவு நேரத்திலும் பாதகமான காலநிலையிலும் ஆயத்தமில்லாத தளங்களில் கூட தரையிறங்கும் திறன் கொண்டது.  c



இந்த ஹெலிகாப்டர் மொத்தமாக 13 ஆயிரம் கிலோ எடை கொண்டது. மணிக்கு 250 கிமீ வேக்அத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக இதன் வேகத்தை 1065 கிமீவரை நீட்டித்துக்கொள்ளலாம். அதிகப்ட்சம் 6000 மீ உய்ரம் வரை பறக்கும்  இந்த ஹெலிகாப்டர் மூலம் 36 பேரையோ அல்லது 4500 கிலோ எடைகொண்ட பொருள்களையோ சுமந்துகொண்டு செல்ல முடியும். இந்த விமானத்தின் காக்பிட் அதிநவீன விமான தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 4 மல்டி ஃபங்ஷன் டிஸ்ப்ளே, இரவு நேரத்திலும் தெளிவாக பார்க்கும் வசதி, வெதர் ரேடார், விமானியின் பணி சுமையை குறைக்கும் விதத்திலான அதிநவீன ஆட்டோ பைலட் அமைப்பு ஆகியவை உள்ளன. 


அதி நவீன ஏவியோனிக்ஸ் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர் எந்தவிதமான புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகளிலும் பயணிக்கும். இரவும் பகல் என  பாதகமான வானிலை சூழ்நிலைகளிலும் இயங்கும் திறன் கொண்டது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிப்ரவரி 2019 இல் ஜம்மு காஷ்மீரில் நடந்த ஒரு விபத்தைத் தவிர இந்த ஹெலிகாப்டரால் பெரிய விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை