தமிழ்நாடு:



  • 12 மணிநேர வேலை சட்ட மசோதா வாபஸ் - மே தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

  • தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடக்கிறது: உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை

  • அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று அதிமுக போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது : ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்

  • தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் 

  • சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று வன உயிரின காப்பாளர் அறிவித்துள்ளார். 

  • சிறார் கூர்நோக்கு இல்லங்களை முதலமைச்சர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

  • குப்பையில் கொட்டப்படும் காய்கறிகள் தொடரும் நிலையில் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

  • தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா:



  • கர்நாடக சட்டசபை தேர்தல் எதிரொலியாக வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 171 குறைப்பு - வீட்டு உபயோக காஸ் விலை 2 மாதமாக மாற்றமில்லை

  • உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை: இந்தியாவில் வேலைவாய்ப்பு 5 ஆண்டில் 22 சதவீதம் சரியும்

  • இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.87 லட்சம் கோடி - நிதியமைச்சகம் தகவல்

  • மார்ச் 1 2023 முதல் மார்ச் 31 2023 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 47 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

  • டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

  • ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சித்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

  • "வகுப்புவாதத்தின் விஷ விதைகளை விதைத்து" மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை அழிக்க சங்பரிவார் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.


உலகம்:



  • செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ஜூராங் ரோவர், முதன்முறையாக, சிவப்பு கிரகத்தில் நீர் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளது.

  • உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கணித்துள்ளது.

  • 3வது வாரமாக நீளும் சூடான் உள்நாட்டு போரில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்.

  • வங்கதேசத்தில் வெப்பநிலை உயர்வால் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  • பெங்களூர் அணியின் டேவிட் வில்லிக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • தோனி தன்னுடைய ஓய்வு குறித்து இதுவரை வெளிப்படையாக ஏதும் கூறவில்லை என சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

  • ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.