ஏழை, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அடுத்த தலைமுறையினர் நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வருவதை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். "மோடி" என்ற பெயரை குறித்து அவதூறாக பேசியாதாக கிரிமினல் வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


ராகுல் காந்தி தகுதி நீக்கம்


பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி எப்போதும் "நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல்" செய்வதாகவும், அதன் அரசியல் ஆதாயங்களுக்காக "நக்சலிசம் மற்றும் பயங்கரவாதத்தை" ஊக்குவிப்பதாகவும் கூறினார். 2019 ஆம் ஆண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சூரத் நீதிமன்றத்தால் வியாழனன்று இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. "எல்லா திருடர்களுக்கும் 'மோடி' என்ற பொதுவான குடும்பப்பெயர் வைத்திருப்பது எப்படி?" என்று பேசியதற்காக, தண்டனை பெற்ற பிறகு, லோக்சபா செயலகம், கேரளாவின் வயநாடு எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் தலைவரை தகுதி நீக்கம் செய்தது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும் வரை எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா


1,780 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு சம்பூர்ணானந்த் சமஸ்கிருதப் பல்கலைக்கழக மைதானத்தில் அவர் ஆற்றிய உரையில், "காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தலித்துகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக ஒரு அறிக்கையை அளித்து, நாடாளுமன்ற அமர்வை காற்றில் பறக்கவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு தேசம் சாட்சியாக உள்ளது. ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதித்ததற்காக நாட்டிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகளின் குழுவான G20 க்கு இந்தியா தலைமை வகிக்கிறது, இது உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான சான்றாகும்", என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் விற்ற இந்திய இளைஞர்.. 188 மாத சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்


இந்தியாவின் வளர்ச்சி காங்கிரஸ்-க்கு வருத்தம்


"இந்தியாவின் புதிய சக்தியை நாடு மட்டுமின்றி உலகமே கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழ்கிறது. ஒருபுறம், உலகமே இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி பெருமிதம் கொண்டு, அதன் மாடலை (வளர்ச்சி) பின்பற்ற ஆர்வமாக உள்ளது, மறுபுறம், தலைமுறை தலைமுறையாக அரசை ஆண்ட போதிலும் சிலர் விமர்சிக்கிறார்கள்," என்று யோகி கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த காங்கிரஸ் அறிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் (மத்தியத்தில்) ஆட்சி அமைக்கும் பாக்கியம் பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. "இந்தியா வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டு அக்கட்சி (காங்கிரஸ்) வருத்தமடைந்துள்ளது. பிரதமரின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் தடைகளை வைப்பது அவர்களின் வழக்கம்" என்று கூறினார்.



நாட்டை பிளவுபடுத்துவதே வேலை


"நாட்டின் வளர்ச்சியைப் பற்றி காங்கிரஸ் ஒருபோதும் சிந்திக்கவில்லை. இவர்கள் எப்போதுமே ஜாதி, மதம், மொழியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த முயன்று வருகின்றனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஊழலில் புதிய சாதனைகளைப் படைத்தனர். இன்று, இந்தியா உலக அளவில் பிரகாசிக்கப் போகும் போது, இந்த மக்கள் நாட்டின் முன்னேற்றத்தை அவதூறாகக் கருதி, ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவதைப் பற்றிக் குறிப்பிட்டு, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றனர். ஏழைகளுக்கு வீடு, கழிப்பறை, ரேஷன், சமையல் எரிவாயு, மின் இணைப்புகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன, ஆயுஷ்மான் பாரத் திட்டமாக இருந்தாலும் சரி, வளர்ச்சிக்கான மற்ற வசதிகளாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் பாகுபாடின்றி அனைவரையும் சமமாகச் சென்றடைகிறது. திட்டங்கள் மூலம் நகரத்திற்கு புதிய மற்றும் பிரமாண்டமான தோற்றத்தை வழங்குவதற்காக பிரதமர் இன்று இங்கு வந்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், காசியில் மட்டும் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் பல விரைவில் திறக்கப்பட உள்ளன. மோடியின் அடுத்த பயணத்தில் இவை காசி மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.