யமுனா நதி: வலையில் மாட்டிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்!

யமுனா நதியில் வலையில் கிடைத்த டால்பினுக்கு நேர்ந்த சோகம், வைரலான வீடியோவால் 4 பேர் மீது வழக்குப்பதிவு

Continues below advertisement

யமுனா நதியில் வலை வீசி டால்பினை பிடித்த மீனவர்கள் அதை சமைத்து சாப்பிட்ட வீடியோவால் போலீசில் சிக்கினர். 

Continues below advertisement

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. எப்பொழுதும் இல்லாத அளவுக்கு யமுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் யமுனா நதியின் நீர்மட்டம் அபாயக்கட்டத்தை தாண்டியதால், யமுனா கரையோரத்தில் வசித்த 27 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களின் தங்க வைக்கப்பட்டனர். அரசு தரப்பில் எச்சரிகை விடுத்தும் யமுனா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிலர் வலை வீசி மீன்பிடித்து  வருகின்றனர். 

அந்த வகையில் கடந்த 22ம் தேதி யமுனா நதியில் 4 மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துள்ளனர்.  அதில் தற்செயலாக டால்பின் மீன் ஒன்று சிக்கியுள்ளது. பெரிய அளவில் கிடைத்த டால்பின் மீனை பர்த்த மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனார். பெரும்பாலாக நதியில் டால்பின்கள் இருப்பதில்லை. ஆனால் அரிதாக யமுனா நதியில் டால்பின் கிடைத்தது மீனவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

டால்பின் மீனை தோளில் தூக்கி போட்டு சென்ற மீனவர்கள், அதை சமைத்து சாப்பிட்டுள்ளனர். டால்பினை தூக்கி செல்லும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்ததால் பலரும் கண்டனத்தை பதிவிட்டு வந்தனர். இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்த அப்பகுதி வனத்துறை அதிகாரி ரவீந்திர குமார் போலீசில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் டால்பினை பிடித்த 4 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் டால்பின் மீனை பிடித்தது ரஞ்ஜீத் குமார், சஞ்சய், தீவன் மற்றும் பாபா என தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக ரஜ்சீத் குமார் என்பவரை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க: Watch Video: கேஸ் விக்குற விலையில..! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள்...!

Maharashtra landslide: நிலச்சரிவில் சிக்கி விலங்குகள் அழுகியதால் துர்நாற்றம்.. 78 பேர் காணாமல் போனதால் தொடரும் அச்சம்!

America: இந்தியா செய்த ஒரு காரியம்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் அரிசி தட்டுப்பாடு.. அமெரிக்காவும் பரிதவிப்பு!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola