மிக மிக மோசமான நிகழ்வாக, ராஜஸ்தான் மாநிலம் இராணா பிரதாப் சாகர் நீர்த்தேக்கத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் சிக்கினர். 


சாம்பல் ஆறு வடமாநிலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிரகுடு. இது, முதலில் மத்தியப் பிரதேசத்தின் வடக்கில் 346 கி மீ தொலைவிற்கு பாய்ந்து, பின்னர் வடகிழக்கில் 225 கி மீ தொலைவிற்கு இராஜஸ்தான் மாநிலம் வழியாகப் பாய்கிறது.   


 






 


ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரைச் சேர்ந்த நான்கு பேர், திருமணத்துக்கு முந்தைய புகைப்பட ஷூட்டிங் மேற்கொள்வதற்காக பிரதாப் சாகர் நீர்த்தேக்கத்துக்கு வந்துள்ளனர். அங்குள்ள பாறை ஒன்றில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போதே, பிரதாப் சாகர் நீர்த்தேக்கம் தவறுதலாக திறந்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மணப்பெண், மணமகன், புகைப்படகாரர், உறவினர் ஆகிய நால்வரும் தண்ணீரால் சூழப்பட்டனர். இது, நால்வருக்கும் மிகுந்த அச்சத்தையும், நடுக்கத்தையும் எற்படுத்தியது. செய்வதறியாது திகைத்த அவர்கள் பாறையின் மீதே தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொண்டனர்.     



        


சம்பவம் குறித்து தகவலறிந்த ராவத்பாட்டா காவல்துறை (சித்தோர்கார் மாவட்டம் Rawatbhata), உடனடியாக மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியது.  அவசர மீட்பு வீரர்களை கொண்டு,பாறையில் சிக்கியிருந்த நால்வரையும் கயிறின் மூலம் மீட்டது.


பிரதாப் சாகர் அணையின் நான்கு மதகுகளும் உடனடியாக திறக்கப்பட்டதன் காரணமாக இந்த மோசமான நிகழ்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீட்கப்பட்ட நால்வர் மீது ஐபிசி-ன் படி    காவல்துறை வழக்கப்பதிவு செய்துள்ளது. வரும், டிசம்பர் 1-ம் தேதி, இந்த தம்பதிக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது.   


மேலும், வாசிக்க: CMDA: சென்னைக்கு வெள்ளம் வந்தா மட்டும் நினைக்கு வரும் சி.எம்.டி.ஏ... யாருப்பா அது... என்னப்பா பிரச்சனை?