புதுச்சேரியில் கடும் மழை பொழிவு ஏற்படும் என்ற ரெட் அலர்ட்டால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோன பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பொதுத் தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


1 முதல் 8ம் வகுப்பு வரை கடந்த 8ம் தேதி முதல் அரை நாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழையால் நவம்பர் 8, 9ம் தேதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் புதுச்சேரிக்கு விடப்பட்டுள்ளது. அதனால் விடுமுறை புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் (10, 11ம் தேதிகளுக்கு) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவித்தார்.



புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்றைய நிலவரப்படி 26 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இதில் தற்போது 9 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 7.21 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும்.


2ம் வகுப்பு மாணவனின் காலைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்ட சைக்கோ ஆசிரியர்..!


முருங்கப்பாக்கம், உழந்தை கீரப்பாளையம், சோரப்பட்டு, வம்புபட்டு, அபிஷேகப்பாக்கம் உள்பட 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது. மீதம் உள்ள 58 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


 


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர