6 மணி நிலவரம்:


மாலை 6 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் பாஜக 56 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் உள்ளது. காங்கிரஸ் 34 தொகுதிகளில், முன்னிலை வகித்து வருகிறது.


3 மணி நிலவரம்:


3 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் பாஜக 54 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் உள்ளது. காங்கிரஸ் 33 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.


1 மணி நிலவரம்:


1 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் பாஜக 53 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் உள்ளது. காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், மற்றவை 1 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.


11 மணி நிலவரம்:


11 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் உள்ளது. காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.


10 மணி நிலவரம்:


10 மணி நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 44 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.   பெரும்பான்மையை தக்கவைப்பதில் இருகட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மற்றவை இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.


 


நாடே உற்று நோக்கும் நாள் இன்று. நடந்து முடிந்த 4 மாநில தேர்தலின் முடிவு இன்று வெளியாகிறது. பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாட்டு மக்களிடையே காங்கிரஸிற்கு இருக்கும் மவுசு எந்த அளவிற்கு உள்ளது, மக்களின் நம்பிக்கை என பல்வேறு விஷயங்கள் இந்த தேர்தல் முடிவில் தெரிய வரும்.


மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.  2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.


அந்த வகையில் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் 7ம்  தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் 67.34 சதவீதம் வாக்குகள் பதிவானது.


கருத்து கணிப்பு:


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பல முக்கிய தகவல்கள் வெளியாகின.


அதன்படி, சத்தீஸ்கரில் 41 முதல் 53 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 36 முதல் 48 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டிருந்தது. மற்ற கட்சிகள் 0 முதல் 4 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டன.


இந்த தேர்தலில் 43.4 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, பாஜக 41.2 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, எந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Election Results 2023 LIVE: 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்: உடனுக்குடன் தெரிந்து கொள்ள லைவ் அப்டேட்