பூமியிலிருந்து நிலவை ஆராய்வதற்காக ஏவப்படும் சந்திரயான் 3 விண்கலம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறியலாம்.


சந்திரயான் 3 திட்டம்:



  • கடந்த 2019ம் ஆண்டு தோல்வியுற்ற சந்திரயான் 2 திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் சந்திரயான் 3. தோல்விகளில் இருந்து கிடைத்த படிப்பினையை கொண்டு, தவறுகளை திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் உள்ள லேண்டர் கருவியை ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • சந்திரயான் 2-ல் ஆர்பிட்டார், ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய மூன்று அமைப்புகள் இருந்தன. ஆனால், சந்திரயான் 3ல் ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய அமைப்புகள் மட்டுமே உள்ளன

  • அதேநேரம் புரபல்சன், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று முக்கிய பகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கிலோ மீட்டர் தூரம் வரையில் லேண்டர் கருவியை, புரபல்சன் கொண்டு செல்ல உள்ளது. அதோடு, நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவ அளவீடுகளை ஆய்வு செய்ய ஸ்பெக்ட்ரோ-பாலாரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட்டரி எர்த் (SHAPE) என்ற நாசாவின் செயற்கைகோளையும் இந்த புரபல்சன் சுமந்த செல்ல உள்ளது.


இதையும் படிங்க - Chandrayaan-3 Live Updates: இன்னும் சில மணி நேரங்களே..! சந்திரயான் 3 - மோடி சொன்ன வாழ்த்து செய்தி தெரியுமா?



  • லேண்டர் அமைப்பு RAMBHA-LP, ChaSTE மற்றும் ILSA ஆகிய தனியார் செயற்கைகோள்களையும்,  ரோவர் அமைப்பு APXS மற்றும் LIBS ஆகிய தனியார் செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது.

  • சந்திரயான்-3, அதன் தகவல் தொடர்பு மற்றும் நிலப்பரப்பு மேப்பிங் தேவைகளுக்காக சந்திரயான்-2 உடன் ஏவப்பட்ட நிலவுக்கு மேலே தற்போது வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரைப் பயன்படுத்தும் என கூறப்படுகிறது

  • லேண்டர் அமைப்பு  1,750 கிலோகிராம் எடை கொண்டது. அதில் 26 கிலோ எடைகொண்ட ரோவரும் அடங்கும்.

  • லேண்டர் 2 க்கு 2 க்கு 1.1 மீட்டர் அளவைக் கொண்டுள்ளது.

  • ரோவர் மற்றும் லேண்டர் இரண்டும் சந்திரனில் சுமார் 14 நாட்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது புவியின் வாழ்நாளில் ஒருநாளுக்கு மட்டுமே சமம் ஆகும்.

  • நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதும் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்ள ஏதுவாக சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.




          விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் - 3 விண்கலம்


 



  • சூரியன் உள்ள திசையில் தரையிறங்காவிட்டாலும் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்ளும் வகையில் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது

  • கூடுதல் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. இதனால், சந்திரயான் 3 மூலம் நிலவு குறித்து இதுவரை யாரும் அறிந்திடாத பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் சர்வதேச விண்வெளி வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு உயரும் என, இஸ்ரோ முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது, 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சர்வதேச விண்வெளி வியாபாரத்தில் இந்தியாவின் பங்கு 2 சதவிகிதம் மட்டுமே. 


இதையும் படிங்க:Maaveeran Review: கோழை டூ வீரன்... அட்ஜஸ்ட்மெண்ட் டூ ஆக்‌ஷன்... மேஜிக் செய்ததா மாவீரன்? ஃபர்ஸ்ட் க்ளாஸ் திரை விமர்சனம்!