8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம்... பகீர் பின்னணி

டெல்லியில் எட்டு வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொன்றதாக 36 வயது கசாப்புக் கடைக்காரர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

மத்திய டெல்லியில் உள்ள யமுனா கதர் காட்டுப் பகுதியில் எட்டு வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொன்றதாக 36 வயது கசாப்புக் கடைக்காரர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அந்த நபர் சிறுமியின் கழுத்தை அறுத்து, முகத்தை சிதைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

ரிஸ்வான் என்ற நபர், பீகாரில் பிறந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு வேலைக்காக வந்துள்ளார். இவர் துர்க்மேன் கேட் பகுதியில் கசாப்பு கடைக்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான ரிஸ்வான், யமுனா கதர் பகுதிக்கு அடிக்கடி போதை பொருளை புகைக்க செல்வார் எனக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 4-5 இடைப்பட்ட இரவில், தர்யாகஞ்ச் குடியிருப்பாளர் ஒருவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் அதிகாலை 4 மணியளவில் எழுந்தபோது, ​​​​தனது மகள்களில் ஒருவரை வீட்டில் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவரைக் காணாததால், அவர் புகார் அளித்து, இந்திய தண்டனைச் சட்டம் 363-ன் கீழ் கடத்தல் வழக்குப் பதிசெய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 18 அன்று, காணாமல் போன சிறுமியின் உடல் யமுனா காதர் பகுதியில் பயங்கர காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 302 (கொலை) ஆகியவை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க 50 போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்ததாக துணை காவல்துறை ஆணையர் (மத்திய) ஸ்வேதா சவுகான் தெரிவித்தார். அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்தபோதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

யமுனா காதர் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் சுமார் 200 பேரிடம் குற்றவாளியைப் பற்றிய தகவல்களைப் பெற விசாரணை நடத்தப்பட்டது. தொழில் ரீதியாக கசாப்புக் கடைக்காரரான ரிஸ்வான், குடிசை பகுதிக்கு அடிக்கடி செல்வதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சாக்லேட் மற்றும் பிற பொருள்களை வாங்கி கொடுத்து நட்பாக பழகியதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அலுவலர் ஒருவர், "சம்பவம் நடந்த அன்று, ரிஸ்வான் யமுனா கதர்க்கு வந்திருப்பது தெரியவந்தது. ரிஸ்வான் தேடப்பட்டு, இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டார். தொடர்ந்த விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்," என்றார். யமுனா காதர் பகுதிக்கு சென்றபோது, ​​பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி என்னை அவரது தாயுடன் நெருங்கிய நிலையில் பார்த்ததாகவும், அதனால், அவரை கொல்ல முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கம் பக்கத்திற்குச் சென்று கஞ்சாவை புகைத்ததாக ரிஸ்வான் கூறினார். அவர் இரவு வரை காத்து கிடந்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் தூங்கும் வரை காத்து கிடந்தார்" என்றார்.

ரிஸ்வான் குடிசைக்குள் நுழைந்தபோது, சிறுமி தனது குடும்பத்தினருடன் தூங்குவதைக் கண்டுள்ளார். மைனர் சிறுமியை கடத்தி, யமுனா காதர் என்ற வனப்பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு, அவர் சிறுமியின் கழுத்தை அறுத்து, முகத்தை சிதைத்தார். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola