பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவுக்கு ஒரு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டனர். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்பின்றி மது அருந்தி, நடனம் ஆடலாமா என்று சன்ன மரீனுக்கு பலரும் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவித்தனர். அதேவேளையில் சன்னாவுக்கு ஆதரவாக குரல்களும் எழுந்தன. தன்னுடைய குடியிருப்பில் அவர் நடனம் ஆடியது தனிப்பட்ட விருப்பம் என்றும் அது குறித்தான விமர்சனம் பிரைவசியில் தலையிடுவது என்றும் குறிப்பிட்டனர்.
பரிசோதனை முடிவு..
இந்நிலையில் பிரதமர் போதை பொருள் உட்கொண்டுவிட்டு நடனம் ஆடியதாகவும், அதுதான் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாவதாகவும் கண்டனம் தெரிவித்தவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டனர். ஆனால் போதைபுகாருக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் சன்னா, நான் சட்டத்துக்கு புறம்பான எந்தவிதபோதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை. மது மட்டுமே அருந்தினேன் என்றார்.ஆனால் தொடர் புகாரை அடுத்து அவர் போதை வஸ்து பயன்படுத்தினாரா என்ற சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டு அரசு, ‘ பிரதமர் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை. சிறுநீர் மூலம் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அனைத்தும் நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. மேலும் இந்த சோதனைக்கான கட்டணத்தை பிரதமர் தன் வருமானத்தில் இருந்தே கொடுத்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
பின்லாந்து நாடு
பின்லாந்து கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் புகழ்பெற்ற நாடு. இங்கு உள்ள கல்வி திட்டங்கள், பற்பல நாடுகளில் முன் மாதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. பலரும் அங்கு சென்று அவர்களது கல்வி முறை குறித்து அறிந்து கொண்டு செல்கின்றனர்.
ஏற்கனவே எழுந்த சர்ச்சைகள்
கடந்த 2020 ஆம் ஆண்டில் பேஷன் இதழ் ஒன்றுக்கு, லோ கட் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த போட்டோ வெளியான போது, அப்போதும் அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என்று கண்டன குரல்களும் தொடர்ந்து வெளிவந்தன. தற்போது டான்ஸ் தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளதை அடுத்து சன்னா மரீன் பிரதமர் பதவிக்கு, அவமரியாதையும் களங்கத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பின்லாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் போதை தொடர்பான சோதனை முடிவுகள் வெளியாகி சன்னாவுக்கு ஆதரவானப்போக்கை உருவாக்கியுள்ளது.