Budget Session 2022 LIVE: பட்ஜெட் கூட்டத் தொடர் 2022: தனது உரையை தொடங்கினார் குடியரசுத் தலைவர்
Budget Session 2022 LIVE Updates: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரை தொடர்பான உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது - நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை.
நாட்டின் கல்வி திட்டங்களை குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..
அம்பேத்கரின் கோட்பாடுகளில் ஒன்றான சமத்துவம், சுதந்திரம் மற்றும் ஒற்றுமையான சமூகத்தை என்னுடைய அரசு பின்பற்றி வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல ஏழைகள் பயன் அடைந்துள்ளனர் என குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு ஆண்டிற்குள் இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தவதில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக அமைந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக பலரும் உயிரிழந்துள்ளனர். எனினும் நமது நாட்டின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் சிறப்பான சேவை ஆற்றி வருகின்றனர். அவர்களுடைய சேவைகளுக்கு என்னுடைய நன்றி என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைவிட இந்தியாவில் தற்போது சுகாதார கட்டமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
வ உ சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படுவது குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
இந்தியா இந்தாண்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையை தொடங்கியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பட்ஜெட் தொடர் முக்கியமான நேரம். மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் "எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரை உள்ளது. அதன்பின்னர் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, "நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஏற்கெனவே விவாதிக்க பல பிரச்னைகள் உள்ளன. இதனால் பணவீக்கம், வேலையிண்மை, விவசாயிகள் பிரச்னை போன்ற பல பிரச்னைகளை நாங்கள் தொடர்ந்து அவ்வப்போது எழுப்பி கொண்டு இருப்போம்" எனக் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு பிறகு 2021-22ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Background
Budget Session 2022 LIVE Updates:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்ட தொடர் என்பதால் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து நாளை மத்திய பட்ஜெட் 2022-23 ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -