நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  


மாத ஊதியம் பெறுபவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    


1961 வருமானவரிச் சட்டத்தின் 16-வது பிரிவில்  திருத்தம் செய்யப்பட்டு வரிசெலுத்துவோர் ஊதியம் (standard deduction ceiling for Salaried Classes) என்ற தலைப்பின் கீழ் பெறும் வருமானத்தை ரூ.50000 ல் இருந்து 1,00,000 ஆக அதிகரிக்க வாய்ப்புண்டு.  எனவே, வரி செலுத்துவோருக்கு 1 லட்சம் வரை கழிவுத் தொகை சலுகை பெறுவார்கள்.  


மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான பணப் பட்டுவாடா மற்றும் விடுப்பிற்கு ஈடான பணம் பெறும் வசதியை (Leave Travel Concession (LTC) Cash Voucher Scheme) 2021 மார்ச் 31ம் தேதியில் இருந்து 2023 மார்ச் 31ம் தேதிவரை நீட்டிக்க வாய்ப்புண்டு. முன்னதாக, 2018-21 ஆண்டுகளுக்கான விடுமுறை பயணச் சலுகைக்குப் பதிலாக பணப் பட்டுவாடா மற்றும் விடுப்பிற்கு ஈடான பணம் பெறும் வசதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ல் அறிவித்தார்.   


வருமானவரி கணக்கு தாக்கலின் போது, வீடுகளுக்கான கடனில் இரண்டு லட்சம் ரூபாய் வரை  வட்டிக்கு வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு ஏற்பட்ட செலவுகளை எதிர்கொள்வதற்காக, தங்களது நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து  நிதிஉதவியை பெற்று வருகின்றனர். அதேபோன்று,கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகள் நிதி உதவியை வழங்கி உள்ளார்கள். எனவே,  இவ்வாறு பெறப்பட்ட பணத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்கும் விதமாக வருமானவரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணி செய்வதற்கான சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, அதனை ஊக்குவிக்கும் வகையில் வீட்டு அலுவலங்கள் (Home Offices) மற்றும் அது தொடர்பான செலவுகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்கும் அறிவிப்பை நிதியமமைச்சர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     


மேலும், வாசிக்க:


Union Budget 2022 LIC : ‛ஏர் இந்தியா முடிந்தது... அடுத்தது எல்.ஐ.சி., தான்’ -நிர்மலா சீதாராமன் சூசகம்!