Postman | போஸ்ட் மேனாக மாறிய மலையாள நடிகர்.. கலாய்த்த ரசிகர்கள்..

இதனை குஞ்சக்கோ போபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது குறித்து நகைச்சுவையாக கருத்தும் பதிவிட்டிருந்தார். 

Continues below advertisement

அனியாதிப்ப்ராவு, ப்ரியம், சந்தமாமா, கஸ்தூரிமான் உள்ளிட்ட பல முக்கிய மலையாளப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன். இவர் போஸ்ட் மாஸ்டர் வேடமிட்ட புகைப்படத்தை கர்நாடக மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர் என்பதுதான் தற்போதைய ஹைலைட். இதனை குஞ்சக்கோ போபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது குறித்து நகைச்சுவையாக கருத்தும் பதிவிட்டிருந்தார். 

Continues below advertisement

அதில்,“ஒருவழியாக கர்நாடகாவில் எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வீடு வீடாகச் சென்று தபாலை சேர்த்த அந்த தபால்காரரின் வேண்டுதல்தான் இதனை நிறைவேற்றியுள்ளது”, எனக் குறிப்பிட்டுள்ளார். போபன் 2010ல் நடித்து வெளியான ஓரிடத்தொரு போஸ்ட்மேன் திரைப்படத்தில் வந்த கதாப்பாத்திரத்தைதான் கர்நாடகா பள்ளிப் பாடத்தில் சேர்த்துள்ளார்கள்.

அவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபலங்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர். உதாரணமாக இயக்குநர் மிதுன் மேனுவேல் தாமஸ்,”வேலையில சேர்ந்துட்டிங்களே லீவு எல்லாம் கிடைக்கறது அப்போ கஷ்டம்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில்தான் போபன் நடித்த பீமண்டே வழி திரைப்படம் வெளியானது. இதுதவிர படா, ரெண்டகம், பகலும் பாதிராவன், அரியிப்பு உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

Continues below advertisement