Breaking News LIVE: கேரளாவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - பெரும் பரபரப்பு

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்.

முகேஷ் Last Updated: 28 Feb 2023 08:37 PM
விழுப்புரத்தில் நடைபெற்ற விபத்தில் 20 மாணவர்கள் படுகாயம்

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லயோலா கல்லூரி மாணவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு மாணவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - பெரும் பரபரப்பு

கேரளா, எர்ணாகுளம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த பிரதமரிடம் கோரிக்கை - அமைச்சர் உதயநிதி

கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மணீஷ் சிசோடியா

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு மறுப்பு

மணீஷ் சிசோசிடியாவிற்கு ஜாமீன் மனு அளிப்பது தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் - உச்சநீதிமன்றம்

அமைச்சரவை எடுக்கும் முடிவக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். 

326 புள்ளிகள் சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்

இந்திய பங்குச்சந்தையான சென்செக்ஸ் 326 புள்ளிகள் சரிவுடன் இன்று முடிவடைந்துள்ளது. 

மின் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு - அவகாசம் நீடிக்கப்படமாட்டாது..

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் நீடிக்கப்படமாடாது என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Tambaram Train - college Student Death : தாம்பரம் அருகே செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கேரளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி எக்ஸ்பிரஸ் ரெயில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிர் இழப்பு

தாம்பரம் அருகே செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கேரளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி எக்ஸ்பிரஸ் ரெயில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிர் இழப்பு

விருதுநகரில் சிகிச்சை பெறும் யானை; வாழ்நாள் முழுக்க பராமரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..

விருதுநகரில் சிகிச்சை பெற்றுவரும் யானை லலிதாவை நிரந்தரமாக தமிழ்நாடு வனத்துறை கைப்பற்றிப் வாழ்நாள் முழுக்க பராமரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் கோர விபத்து மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

திருச்சி விமான நிலையத்தில் 27 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

போக்குவரத்து விதி மீறல் - 3,702 பேர் மீது வழக்கு பதிவு..!

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நோ- பார்க்கிங்கில் வணியை நிறுத்தியது, சிக்னல்களை பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 702 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மணீஷ் சிசோடியாவை கைது செய்தத்ற்கு எதிராக மனு..!

தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி துணை முதலவர் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்துள்ளார். 

Breaking News LIVE : நான் முதல்வன் திட்டம் - 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி!

நான் முதல்வன் திட்டம் மூலம் கடந்த ஓராண்டில் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. - அண்ணா நூற்றாண்டு நூலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

Breaking News LIVE : தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் - தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் சென்னையில் விரைவில் செயல்படுத்தப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

ஆம்பூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!

திருப்பத்தூர்: ஆம்பூர் வாணியம்பாடி ஆம்பூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் முடக்கம்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 


 





கால்பந்து: 2022ம் ஆண்டின் சிறந்த வீரர் மெஸ்ஸி

2022ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. 


 

பிரதமர் மோடியின் தம்பி சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


 

ஏற்றமிகு ஏழு திட்டங்கள் இன்று தொடக்கம்..!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 

ஈரோடு இடைத்தேர்தல் - பாதுகாப்பு அறைக்கு சீல் வைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

கண்டெய்னர் மீது கார் மோதியதில் 5 பெண்கள் பலி..!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நிறுத்தியிருந்த கண்டெய்னர் மீது கார் மோதியதில் 5 பெண்கள் பலி 

Background

சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 


கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 283வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று (பிப்ரவரி 28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.