ஃபீனிக்ஸ் வீழான்


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் என்ற படம் உருவாகியுள்ளது  பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம்  வெளியாகியது. நாயகனாக அறிமுகமாகியுள்ள முதல் படமே ரத்தம் தெறிக்க விஜய் சேதுபதி மகன் இந்த படத்தில் களமிறங்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் டிராமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் படக்குழு அறிவித்துள்ளது


சூயாவின் கங்குவாவுடன் மோதும் ஃபீனிக்ஸ் வீழான்


இதன்படி வரும் நவம்பர் 14 ஆம் தேதி ஃபீனிக்ஸ் வீழான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதே நாளில் தான் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாக இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சரித்திர படமாக உருவாகி இருக்கும் கங்குவா கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருந்தது. ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அதே நாளில் வெளியாக இருந்ததால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 


சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகியது. இந்தப் படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இதன்பிறகு வணங்கான் , வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்தார் சூர்யா ஆனால் இந்த படங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்திற்கா காத்திருக்கிறார்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தியிலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் கங்குவா திரைப்பட மிகப்பெர்ய பான் இந்திய வெற்றிப் படமாக அமையும் என அனைவரும் நம்புகிறார்கள். இப்படியான நிலையில் சூர்யா சேதுபதி  நடித்துள்ள ஃபீனிக்ஸ் வீழான் திரைப்படம் வெளியாவது அந்த படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒருவேளை நல்ல கதையாக இருந்து படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால் மக்கள் நிச்சயம் இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது.