Breaking News LIVE : 7 இடங்களில் பேருந்து நிலையங்கள் - அரசாணை வெளியீடு 

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்,.

ஆர்த்தி Last Updated: 27 Feb 2023 05:44 PM
டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவுக்கு 5 நாட்கள் காவல்- சிபிஐ நீதிமன்றம்

மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா மீதான வழக்கு  சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசார்ணை நடைபெற்றது. இவ்வழக்கில் 5 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Breaking News LIVE : 7 இடங்களில் பேருந்து நிலையங்கள் - அரசாணை வெளியீடு 

 எடப்பாடி, ஆற்காடு, திருவள்ளூர், ராமநாதபுரம், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய 7 நகராட்சியில் ரூபாய் 93 கோடி செலவில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Breaking News LIVE : நாகாலாந்து தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம்!

நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.99% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கைதான டெல்லி துணை முதலமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


விரிவாக படிக்க: Manish Sisodia Arrested: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது - பெரும் பரபரப்பு..!

குரூப் 2 தேர்வு தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ச்சிக்கு ரூபாய் 120 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் எல்.முருகன்

 தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ச்சிக்காக ரூபாய் 120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE : அண்ணாமலை பேச்சு - டி.ஜி.பி.-யிடம் தொல்.திருமாவளவன் புகார்!

பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு தொடர்பாக டி.ஜி.பி.-யிடம் புகார் அளித்துள்ளதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க.வினர் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ்க்கு 1 சதவீதத்துக்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு..!

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது மதுரை எய்ம்ஸ்க்காக கணக்கிடப்பட்ட மொத்த நிதியான 1,407 கோடி தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் - அண்ணாமலை வாழ்த்து..!

 Khushbu  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தேசிய மகளிர் ஆணைய செயற்குழு உறுப்பிராக குஷ்பு நியமனம்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது

சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. 

Breaking News LIVE : அடுத்தடுத்து நடந்த 2 கொலை; அதிரடியாக 54 ரவுடிகளை கைது செய்த கோவை போலீஸ்..!

கோவையில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகளையொட்டி 54 ரவுடிகளை அதிரடியாக கைது செய்து கோவை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

Breaking News LIVE : அடுத்தடுத்து நடந்த 2 கொலை; அதிரடியாக 54 ரவுடிகளை கைது செய்த கோவை போலீஸ்..!

கோவையில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகளையொட்டி 54 ரவுடிகளை அதிரடியாக கைது செய்து கோவை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

Breaking News LIVE : ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்பு..!

 ஐகோர்ட் நீதிபதியாக லட்சுமிநாராயணன் பதவியேற்றார். அவருக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாக கருதப்படும் - பாஜக

வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாக கருதப்படும் - பாஜக

Breaking News LIVE : சென்செக்ஸ் 487 புள்ளிகள் சரிவு; 58,976 என தள்ளாடும் மும்பை பங்குச் சந்தை..!

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ்  487 புள்ளிகள் சரிந்து 58,976 என்ற நிலையில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

ரூ 1,453 கோடியில் நவீனமயமாகும் 3 பேருந்து முனையங்கள்..!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வியாசர்பாடி, வடபழனி ஆகிய பேருந்து முனையங்கள் ரூபாய் 1,453 கோடியில் புதுப்பிக்கப்படவுள்ளது என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி 10.01 % வாக்குப்பதிவு 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி 10.01 % வாக்குப்பதிவு 


22,973 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி 10.01 % வாக்குப்பதிவு 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 9 மணி நிலவரப்படி 10.01 % வாக்குப்பதிவு 


22,973 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்

ஈரோடு கிழக்குத் தொகுதியில், பெரியார் நகர் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில், பெரியார் நகர் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்

Udhayanidhi Stalin : நாளை காலை, பிரதமர் மோடியைச் சந்திக்கிறார், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாளை காலை, பிரதமர் மோடியைச் சந்திக்கிறார், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வெற்றிபெற முடியாது என்பதால், எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

வெற்றிபெற முடியாது என்பதால், எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

கச்சேரி வீதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

கச்சேரி  வீதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 

ஈரோடு கிழக்கு வாக்குச்சாவடி ஒன்றில் மை அழிவதாக அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு வாக்குச்சாவடி ஒன்றில் மை அழிவதாக அதிமுக புகார்: தீர்வு காணப்பட்டதாகச் தெரிவித்த தேர்தல் ஆணையம்

Background

சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 


கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 282வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று (பிப்ரவரி 27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.