Breaking News LIVE: கள்ளச்சாராய விற்பனை: 2 நாட்களில் 1588 பேர் கைது

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 15 May 2023 09:24 PM
கள்ளச்சாராய விற்பனை: 2 நாட்களில் 1588 பேர் கைது

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 1588 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். 

Breaking News LIVE: ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி மூன்று பேர் பலி

புதுகோட்டை ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.

Breaking News LIVE : லாட்டரி மார்ட்டினின் ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம்

லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது.

Breaking News LIVE: மே 21-ம் தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா!

புகழ்பெற்ற ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் மே 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

மே மாதம் 19 ஆம் தேதி நண்பகல் 2மணிக்கு  11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

10 வகுப்பு தேர்தல் முடிவுகள்..!

மே மாதம் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு  10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: கள்ளச்சாரயம் விற்பனை விவகாரம் - உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை!

கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Breaking News LIVE:10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு எப்போது?

Tamil Nadu 10th 11th Results: 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து முடித்தனர். இந்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

முதலமைச்சர் ஆறுதல்..!

கள்ளச்சாராயம்  அருந்தி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் முதலமைச்சர் நலம் விசாரித்தார். 

Breaking News LIVE: விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், பொன்முடி, மஸ்தான் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வின் போது உடனிருந்ததனர்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 34-பேரை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்ம். 

Breaking News LIVE: விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர்!

 விஷ சாராயம் குடித்து,விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். 

கள்ளச்சாராயம் - 10 பேர் தலைமறைவு..!

கள்ளச்சாராயம் விற்றதாக காவல்துறை தேடப்படு வருபவர்களில் 10 பேர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

கள்ளச்சாராயம்; சிகிச்சைக்கு பயந்து தப்பியோட்டம்..!

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார். 

5 நாட்களுக்கு மழை..!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாடக்ளுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கள்ளச்சாரய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய செயலாளராக ககன் தீப் சிங் பேடி..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார். 

பாண்டிச்சேரி காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலக அறிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 202 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 121 பேர் சொந்த பிணையில் விடிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


அதிரடி நடவடிக்கையால், 5 ஆயிரத்து 901 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஆயிரத்து 106  மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


பாண்டிச்சேரி காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில்   எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலக அறிக்கை வெளியிட்டது, அதில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாளை மரக்காணம் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர்..!

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைப் பார்க்க நாளை மரக்காணம் செல்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

சிறப்பு படை - டிஜிபி உத்தரவு..!

தமிழ்நாட்டில் விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்

விழுப்புரம் விரையும் முதலமைச்சர்..!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் ஆறுதல் தெரிவிக்க இன்று பிற்பகல் விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

Background

கர்நாடகா தேர்தல் முடிவுகள்:


கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதேநேரம் ஆளுங்கட்சியான பாஜக வெறும் 66 இடங்களை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது. கடந்த தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றிய நிலையில்,  இந்த முறை அது இரட்டை இலக்கங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை:


இந்த தோல்வியால் தென்னிந்தியாவில் இருந்து பாஜக முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவிற்கு கிடைத்த இந்த தோல்வி எதிர்கட்சிகளுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் பெற்றுள்ளனர்.


எது எப்படி இருந்தாலும் பாஜகவின் ஓட்டு சதவிகிதம் சற்றும் குறையவில்லை. கடந்த முறை பெற்ற 36 சதவிகித ஓட்டுக்கள் அப்படியே கிடைத்துள்ளன. அப்புறம் எப்படி காங்கிரஸ் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை 5 சதவிகித ஓட்டுக்கள் அதிகப்படியாக வாங்கியது என்ற கேள்வி எழலாம். அது பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்த மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் ஓட்டு சதவிகிதமாகும். ஆம், பெரிதாக கொள்கைகள் எதுவும் இல்லாமல், பதவி கொடுத்தால் போதும் பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி யார் பக்கம் வேண்டுமானாலும் தாவுவோம் என காத்திருந்த குமாரசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய சவுக்கு அடி. 


கடந்த முறையைவிட இந்த முறை மதசார்பற்ற ஜனதா தள கட்சி 5 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. அது அப்படியே காங்கிரஸ்க்கு விழுந்துள்ளது.  இந்நிலையில், பாஜக பெற்ற தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை இங்கு அறியலாம்.


இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள்:


பாஜக தலைமையிலான கர்நாடக அரசு கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருந்தது.  கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை, இஸ்லாமியர்களுக்கான 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்து, கட்டாய மதமாற்ற தடை சட்டம் மற்றும் பசுவதை தடுப்புச் சட்டம் என பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளனர். இது அந்த மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே கடுமையான எதிர்ப்பை பெற்றது.


இது தோல்விக்கு காரணமாக அமைந்தாலும், இந்துக்கள் அதிகம் உள்ள வடக்கு பிராந்தியத்தில் பாஜகவிற்கு ஆறுதலை தந்தது. 


தோல்வியடைந்த இந்துத்துவா?


இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தியே பாஜகவினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். மாநிலத்தில் சில தரப்பினரின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான பஜ்ரங் தள் அமைப்பிற்கு தடை விதிக்கப்படும் என வாக்குறுதி அளித்தே காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால், பாஜகவோ அந்த அமைப்பிற்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது. பிரதமர் மோடி பரப்புரையின் போது, ஜெய் பஜ்ரங் பலி  என முழக்கமிட்டுதான் பேச்சையே தொடங்கினார். எந்த அளவிற்கு தரையில் இறங்கி வேலைப்பார்க்க வேண்டுமோ அந்த அளவுக்கு மோடியும் அமித்ஷாவும் தங்களது வியூகங்களை அமைத்தனர்.


ஆனாலும், அந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியைதான் கண்டுள்ளது. மெஜாரிட்டியான மக்கள் இந்து என்பதை காரணம் காட்டி பாஜக இந்துத்துவாவை இறுக்கிப் பிடித்தாலும் அதிலும் நடுநிலையாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும் அவர்களின் வாக்குகள் சிதறும் என்பதையும் மோடியின் பாஜக கண்மூடித்தனமாக நம்ப மறுக்கிறது எனத் தெரிகிறது. 


ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு:


சில விஷயங்களில் கடும் பிடிவாதத்தனத்தினால் ஆளும் பாஜகவிற்கு எதிரான மனநிலை பொதுமக்களிடையே பரவலாக காணப்பட்டது என்பது வெட்டவெளிச்சமாக தெரியவருகிறது. அதன் விளைவுகளையே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 40 சதவிகிதம் அளவிற்கு கமிஷன் பெற்றதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் அம்பலமானதோடு விலைவாசி உயர்வும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. 


உட்கட்சி பூசல்:


உட்கட்சி பூசலும் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வழக்கமாக இந்த பிரச்சினை இருக்கக் கூடிய காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கூட்டாக சேர்ந்து திறம்பட இந்த தேர்தலை எதிர்கொண்டதாகவும், அதேநேரம் பாஜகவில் உள்ளூர் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம் என பெயர் சொல்ல விரும்பாத பாஜக பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். 


அதுமட்டுமல்லாமல், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா வயதை மட்டுமே காரணம் காட்டி ஓரம்கட்டப்பட்டார். இதன்மூலம் பாஜக பாரபட்சம் பார்ப்பதில்லை என்ற நல்ல எண்ணம் மக்கள் மத்தியில் எழும் என பாஜக நினைத்தது. ஆனால் அது பெரிதும் கை கொடுக்கவில்லை. அவற்றில் பெரும்பாலானவை கைக்கு வாக்குகளாக மாறின. அதிருப்தியில் இருந்த எடியூரப்பாவே சில வேலைபாடுகளை பார்த்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை எனக் கூறப்படுகிறது. 


வலிமையான காங்கிரஸ்:


பாஜகவின் எந்தவொரு நகர்வையும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான சிவக்குமார் உடனடியாக எதிர்கொண்டு பதிலடி தந்தார். தேர்தலுக்கு முன் நடந்த கருத்து கணிப்பின் போது பொம்மையை காட்டிலும் சித்தராமையாவையே முதலமைச்சராக ஏற்க தயார் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இது பசவராஜ் பொம்மையை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டியது என சொல்லப்பட்டது. 


இதோடு ராகுலை மோடிக்கு எதிரான தலைவராக நிறுத்தி எதிர்க்கட்சிகளோடு பேச காங்கிரஸ்க்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தலைமைக்கு கர்நாடக தேர்தல் மூலம் காங்கிரஸுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் முன்னெடுக்கலாம் என்பதில் எந்த தயக்கமும் இல்லை.  


இந்த தேர்தலில் ராகுலின் பங்களிப்பை பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் பாதயாத்திரை வியூகம் ஒருபக்கம் என்றால் அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் மறுபக்கம் உதவியுள்ளது என்றே கூறலாம். ஆட்சியை வைத்துக்கொண்டு கருத்துக்களை கருத்துக்களால் மோதாமல் அதிகாரத்தால் பாஜக கையாண்ட விதம் மக்களை கடுப்பேற்றியுள்ளது. 


ராகுல்காந்தியை சிறைக்கு அனுப்ப முடிவெடுத்தது, எம்.பி. பதவியை பிடுங்கியது, வீட்டை பிடுங்கி தெருவுக்கு அனுப்பியது என ராகுல் மீதான அனுதாபங்கள் ஏராளம்... இவை அனைத்தும் மோடி மீதான எதிர்ப்பை காட்டவே வழிவகுத்தது. இந்த விஷயத்தில் எந்த மாதிரியான அரசியல் வீயூகத்தை மோடி பயன்படுத்த நினைத்தார் என்பது புலப்படவில்லை.  


தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?


இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பாஜக தோல்வியுற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்றால் அது சந்தேகம் தான். உள்ளூர் பிரச்சினைகள் என்பதும் தேசிய அரசியல் என்பதும் வேறு. அதேநேரம், இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிர்ப்பு மற்றும் தீவிர இந்துத்துவா ஆகியவை தொடர்ந்து பாஜகவிற்கு வெற்றியை தராது என்பதையும், எதிர்க்கட்சிகள் தீர்க்கமாக இணைந்து போராடினால் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் கர்நாடகா தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.


எது எப்படியோ, இந்த தேர்தல் மூலம் சில விடாப்பிடித்தன கொள்கைகளுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்து, மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்தால் கட்சியும் ஆட்சியும் நீடிக்கும். இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வரை கொண்டாடிவிட்டு பின்னர் ஆட்டம் காண வேண்டிய நிலைதான் இருக்கும். 


மோடிக்கு கிடைத்த தோல்வியாக இந்த தேர்தல் கருதப்பட்டாலும், அப்படியெல்லாம் இல்லை... இது மோடிக்கான எதிர்ப்பு அலை இல்லை. மாநில அரசின் தவறுகளே தோல்விக்கு காரணம் என்று சில ஊடகங்கள் காட்ட முயற்சிக்கின்றன. அப்படியென்றால் மோடி ரோடு ஷோ நடத்தியதெல்லாம் வீணாய் போன காரணம் என்ன கோபால்... என்று கேட்பதை தவிர வேறுவழியில்லை. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.