Breaking LIVE: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

Breaking LIVE: அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கபோகும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள..

ABP NADU Last Updated: 09 Sep 2022 03:51 PM
ஈபிஎஸ் நாளை திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் 

வேலுமணி வழக்கில் இறுதி அறிக்கையை தர தடை நீட்டிப்பு 

எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஒழிப்புத்துறைக்கு விதித்த தடை நீட்டிப்பு : ஐகோர்ட்

உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய  அரசு தடை 

உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று முதல் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு 

ஆன்லைன் ரம்மி விளையாட்டு  நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கில் ஆன்லைன் ரம்மியை நடத்தும் விளையாட்டு நிறுவனங்களுக்கு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.


ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான வழக்கு 10 வாரத்திற்கு பிறகு மீண்டும் பட்டியிலப்படுகிறது

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து  ரூ. 60.30 ஆக விற்பனையாகிறது

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து  4,735 ஆக விற்பனையாகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,096  ரூபாயாகவும், ஒரு கிராம் 5,137 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


 

Breaking LIVE - திமுகவை விமர்சிக்க எடப்பாடிக்கு தகுதியில்லை - முதல்வர் ஸ்டாலின்

அதிமுக எம்.எல்.ஏ.க்களே எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதில்லை, திமுக எம்.எல்.ஏக்களா பேச போகிறார்கள் - முதல்வர் 


தற்காலிக பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, இன்னொரு கட்சியை விமர்சிப்பதாக முதல்வர் பேச்சு

செப்.15க்குள் CUET-UG தேர்வு ரிசல்ட் - யுஜிசி

செப்.15ம் தேதியோ அல்லது 2 நாட்களுக்கு முன்போ CUET-UG தேர்வு முடிவை வெளியிட என் டிஏ திட்டம் : யுஜிசி தலைமை ஜெகதீஷ்

Breaking LIVE : வேலுமணி விவகாரம் - தமிழக அரசின் மனு  இன்று விசாரணை

எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு எதிரான தமிழக அரசின் மனு இன்று விசாரணை

டைமண்ட் லீக் தொடர் : சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

சுவிட்சர்லாந்து : டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

கோவை அருகே 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார் : 2 பேர் பலி

கோவை மாவட்டம் தென்னமநல்லூர்  அருகே பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அதிவேகமாக வந்த கார் 120 அடி ஆழ கிணற்றுக்குள் கார் மூழ்கியது.வடவள்ளி பகுதியை சேர்ந்த  ஆதர்ஷ், ரவி, நந்தனன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 


காரை ஓட்டி வந்த ரோஷன் என்பவர் மட்டும் கதவைத் திறந்து வெளியே வந்ததால் உயிர் பிழைத்தார். 

ஆசிய கோப்பை தொடர் : ஆப்கானிஸ்தான் எதிரான போட்டி - இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

பெங்களூரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

பெங்களூர் நகரத்தில் அடுத்த இரண்டு நாட்களும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது.

Background

சென்னையில் 111வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 109வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 9) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.