Breaking LIVE: குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ ரூ. 40 முதல் ரூ.42 வரை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும் திமுகவும் உடன்பாடு செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு. பிசிசிஐ, உ.பி. கிரிக்கெட் சங்கம், சிஎஸ்கே நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவு
இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர்ஷேக் ஹசீனா இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விளையாட்டுதுறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்க ரூ. 16. 30 லட்ச நிதியை அரசு விடுவித்தது. இதன்மூலம், 2018-2019, 2019- 2020 ஆகிய ஆண்டுகளுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுக்கு தடகள வீரர் மோகன் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேளாண்மை, உழவர் நலத்துறை சார்ப்பில் முடிவற்ற ரூ.125.28 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துளார்.
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.ஆர் பாலு
குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவை அமைத்தது புதுச்சேரி அரசு
இந்தியாவில் இதுவரை 213.72 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை
சேலம் : வீட்டினுள் புகுந்த மழை நீரில் மூழ்கி இரு மூதாட்டிகள் உயிரிழப்பு..
பயிர் காப்பீடு முறையாக கணக்கீடாததற்காக மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு 5 லட்சத்து 89 ஆயிரத்து 646 ரூபாய் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, சமூக நலவாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ரூ.38,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 14 உயர்ந்து ரூ.4,750 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து. ரூ.59 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ரூ.38,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 14 உயர்ந்து ரூ.4,750 க்கு விற்பனையாகிறது.
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி பகுதியில் பெய்து வரும் பலத்த மலை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 80ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டதாக சென்னை மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
டெல்லி சென்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தினார்.
பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
62 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாம்பாறு அணையை சீர்மைக்கும் பணி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Background
சென்னையில் 108வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -