Breaking LIVE : தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
சென்னை - சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கூலிப்படையைச் சேர்ந்த மதுரை பாலாவை கொலை செய்ய முயற்சி.
நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய வந்த நிலையில் 2 பேர் தப்பியோட்டம் - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி
26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திட்டம் தொடக்கம். அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தகைசால் பள்ளிகள் டெல்லி பள்ளிகளை போல் மாதிரி பள்ளிகளை உருவாக்கும் திட்டம்
முதற்கட்டமாக 60 ஆயிரம் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை. புதுமைப்பெண் திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி ஒதிக்கீடு
மாதம் தோறும் 7 ஆம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 செலுத்தப்படும். புதுமைப்பெண் திட்டத்திற்காக 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்
6-12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயிலும் திட்டம்.அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் உதவும்
ராமாமிர்தம் அம்மாள் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம். பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில், பள்ளிக்கல்வி , உயர்கல்வியில் பாய்ச்சலாக அமையும் திட்டமாக, புதுமைப்பெண் திட்டம் இருக்கும் - முதல்வர்
தமிழ்நாட்டில், பள்ளிக்கல்வி , உயர்கல்வியில் பாய்ச்சலாக அமையும் திட்டமாக, புதுமைப்பெண் திட்டம் இருக்கும் - முதல்வர்
ஆம் ஆத்மி தலைவராகவும், டெல்லி முதல்வராகவும் அரவிந்த் கெஜ்ரிவால் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று. 16 பேர் மரணம்
நிமிர்ந்த நன்னடை , நேர்கொண்ட பார்வை என்பதிற்கு ஏற்றவாறு மாணவிகள் சிங்கப் பெண்களாக திகழ்கின்றனர் - முதல்வர் ஸ்டாலின்
பஞ்சாப் மாநில வெற்றியைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாடே உற்று நோக்கத் தொட்ங்கியிருக்கிறது - முதல்வர்
சீனாவின் சூங்கிங் நகரத்தில் 6.4 என்கிற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்து 59,167 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இந்தியாவில் ஒரேநாளில் 5,910 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த மதிப்பு எண்ணிக்கை 4,44,61,725 ஆக அதிகரித்துள்ளது
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ரூபாய் 37,888க்கு விற்கப்படுகிறது
சாத்தான்குளம் அருகே சுப்பிரமணியபுரத்தில் ஜெயராணி என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை
பாடாலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ராம்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5.70 லட்சம் கொள்ளை
ஈராக் நாட்டின் எர்பிள் பகுதியில் அமைந்துள்ள ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி பெண்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
பிரிட்டனின் புதிய பிரதமர் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளார்.
ரஷ்யாவை எதிர்கொள்ள ஜெர்மனியிடம் மீண்டும் ஆயுத உதவியை உக்ரைன் கேட்டுள்ளது.
மூன்று நாள் அரசு முறை பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வர உள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கேலாட் உடன் சசி தரூர் ஆலோசனை.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
தேசிய நல்லாசிரியர் விருது பெருபவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்திய கேரளா முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
Background
சென்னையில் 108வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -