Breaking LIVE : ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 03 Sep 2022 09:11 PM
ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

அமெரிக்காவின் நாசா நிலவிற்கு அனுப்புவதற்காக திட்டமிட்டிருந்த ஆர்டெமிஸ் 1 ஏவுகணை ஏவுதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி பணியாளர்களுக்கான ஒப்பந்த முறை விரைவில் ரத்து- அமைச்சர் கே.என்.நேரு

மாநகராட்சி பணியாளர்களுக்கான ஒப்பந்த முறை விரைவில் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் விநாயகர் சதுர்த்தி

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அடுத்தாண்டும் சி.எஸ்.கே. கேப்டனாக தோனி நீடிப்பார் - சென்னை சூப்பர்கிங்ஸ் சி.இ.ஓ.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அடுத்தாண்டு தோனியே நீடிப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ. தெரிவித்துள்ளார். 

டாஸ் வென்ற இலங்கை..! ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்..!

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளனர். 

சன் ரைசர்ஸ் ஐதராபாத் தலைமை பயிற்சியாளர் லாரா..!

ஐபிஎல் தொடர் : சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக லாரா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் 7,219 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 7,219 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7,219 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 7,219 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது..!

திருவனந்தபுரத்தில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. 

இலங்கை திரும்பிய கோட்டபய ராஜபக்ச

இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை அன்று நாடு திரும்பி உள்ளார்.

Background

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் தீர்மானமும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டது.


இந்த நிலையில், இந்த தீர்ப்பின் 128 பக்க நகல்கள் வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை கீழே விரிவாக காணலாம்.



  • ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும்.

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது

  • இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்பது தற்போது சாத்தியமில்லாதது . இந்த உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும்

  • ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், ஜூன் 23-ந் தேதிக்கு முந்தையை நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.

  • அ.தி.,மு.க. பொதுக்குழுவிற்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை

  • ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என ஓ.பி.எஸ். தரப்பு கூறுவதை ஏற்க முடியாது

  • பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுத்தார்

  • 2 பேரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட இயலாத நிலையில், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது

  • ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என்ற தீ்ரமானம் செல்லும் 

  • எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானம் செல்லும் 


இந்த முக்கிய அம்சங்கள் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்த காரணத்தால் அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதேசமயத்தில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தேனியில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 


நீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அ.தி.மு.க.வின் பதவியை மீண்டும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.