மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்

Continues below advertisement

மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

மேலும் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். 2025 - 2026ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்டு அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

 

 

 

Continues below advertisement