Breaking LIVEமத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவாக காணலாம்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.எஸ்.வெங்கடரமணியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க.வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தேவ்ரியம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். குடோனில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். இதில் சிறுவர் உட்பட 4 பேருக்கு கடும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து வெடித்ததால் மீட்பு பணிகள் சவாலானதாக உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரேசன் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை நகரத்தில் கனமழை பொழிந்து வருகிறது
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது - மத்திய அரசு
சென்னை ஆயிரம் விளக்கு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது!
இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரம், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், குமரிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு
பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்ததை தொடர்ந்து பிஎப்ஐ
அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டது
பகத்சிங்கின் பிறந்த நாளையொட்டி சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்பட்டது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 40 காசுகள் குறைந்து ரூ.81.93 என்ற புதிய உச்சத்தை தொட்டது
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதியானதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அமைச்சர் 2 நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து 37,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 15 அதிகரித்து ரூ.4625க்கு விற்பனை செய்யப்படுகிறது
மழை பாதிப்புகளை குறைக்க சில முக்கிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல். தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 40, 979ஆகக் குறைந்துள்ளது.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி 21ஆவது நாளாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக மலப்புரம் பண்டிக்காட்டிலிருந்து ராகுல் காந்தி தனது நடைபயணத்தைத் தொடங்கினார்.
சென்னை - தாம்பரம் அருகே தனியார் கல்லூரி அருகே காட்டில் பதுங்கி இருந்த ரவுடி சச்சினை துப்பாக்கியால் சுட்டு காவலர்கள் கைது செய்தனர்.
காவலர்களை கத்தியால் வெட்ட ரவுடி சச்சின் முயன்றதை அடுத்து முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு அவரை காவலர்கள் பிடித்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
தாம்பரம் அடித்த பூந்தண்டலம் பகுதியில் இருந்த ரவுடி சச்சினை பிடிக்க முயன்றபோது காவலர் பாஸ்கர் மீது தாக்குதல். தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு பிடித்தது காவல்துறை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடை உடனே அமலுக்கு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, கோடம்பாக்கம், அசோக் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்,
1960, 70களின் முன்னணி நடிகையான ஆஷா பரேக், குஜராத்தி, பஞ்சாபி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக விளங்கிய இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுளைப் பெற்றுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
மனு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
வைகை அணையில் இருந்து மதுரை 58ஆம் கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு இன்று காலை 11 மணி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Background
சென்னையில் 130ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 130ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -