Breaking LIVE: 'தமிழ் வெறும் மொழியல்ல... தமிழ் நம் உயிர்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
தமிழ் பரப்புரை கழகத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் வெறும் மொழியல்ல, தமிழ் நம் உயிர் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் பல்வேறு இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள நிலையில், உளவுப் பிரிவு உதவி ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மியான்மரில் உள்ள தமிழர்களை தாய்லாந்து அழைத்துவரும் பட்சத்தில், அவர்களை தமிழகம் மீட்பதற்கான பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோயம்பேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பர் 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் மற்றும் 75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய சிறை 5, சேலம் மத்திய சிறை 1, கோவை மத்திய சிறை 12, திருச்சி மத்திய சிறை 12, மதுரை மத்திய சிறை 22, திருச்சி பெண் சிறை 2, புழல் பெண் 2 புதுக்கோட்டை சிறை 4 பேர் என மொத்தம் 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நன்னடத்தை விதிகளின்படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினிக்கு 9வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை வண்டலூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது கடைசி லாவர் கோப்பை தொடரில் தோல்வியுற்று கண்ணீருடன் ஓய்வுபெற்ற தருணம் பார்ப்போரை கண்ணீர் மல்க செய்தது.
மதுரை மத்திய சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட இருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரைக்கழகம் தொடக்க விழா : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இனி பொது மக்களுக்கு இடையூறாகவோ , அச்சுறுத்தும் வகையிலோ பேருந்துக்களில் படிகளில் பயணம் செய்யும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி நிலைய அலுவலரும் பாஜகயின் தீவிர ஆதரவாளமான டாக்டர் மனோஜ் குமார் என்பவரது இரண்டு கார்கள் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கார்களுக்கு மர்ம நபர்கள் நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளனர். இது அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தீ வைத்து சென்ற எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Background
சென்னையில் 126ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 126ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.24) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -