Breaking LIVE: நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து...சிபிஐ அறிவிப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவித்துள்ளது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளோடு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நீரா ராடியா பேசியதாக வெளியான ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில் நீரா ராடியாவின் உரையாடலில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்றூம் முதற்கட்ட விசாரணையைக் கைவிடுவதாகவும் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவையின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 13 பேரை சஸ்பெண்ட் செய்து அந்த மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
மியான்மரில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 பேரை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மும்பையில் உள்ள துறைமுகத்தில் ரூபாய் 1,725 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.
இளம்பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளதாகவும், போதைப் பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவதோடு பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதாகவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை, பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில் தேனியைச் சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக்கொள்ளலாம் என்றும், ரேஷன் பொருள்களை ஒழுங்குப்படுத்துவதற்காக ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,620 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40,336 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,042 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ.61.80 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.62,800 விற்பனையாகிறது.
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரணைகள் அடுத்த வாரம் முதல் நேரலை செய்யப்பட உள்ளன.
மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஆவணங்கள் இல்லாததால் சூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருகளுக்கு இந்தியா சார்பில் ’செல்லோ ஷோ’ எனும் குஜராத்தி திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குஜராத் கிராமத்தில் வசிக்கும் சிறுவனின் சினிமா மீதான காதலை எடுத்துரைக்கும் இந்தப் படத்தை பான் நளின் இயக்கியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் 100 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் இன்று நடைபெற உள்ள நிலையில், சளி, காய்ச்சல், தலைவலி இருந்தால் முகாம்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
ஆந்திரப் பிரதேசம், சித்தூர் அருகே காகிதத் தட்டுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர், அவரது மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,666ஆக நேற்று அதிகரித்த நிலையில், இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன.
Background
சென்னையில் 123ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 123ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -