Breaking LIVE: தமிழ்நாட்டில் மீண்டும் 500-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் 500-ஐ கடந்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு 9 மீட்டர் உயரத்துக்கு கட்டடங்கள் கட்ட அனுமதி தந்தது எப்படி ? : ஐகோர்ட் கிளை
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவரான சசிதரூர் எம்பி திடீர் சந்திப்பு. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சோனியாவை சந்தித்தார் சசிதரூர்.
சோனியாவுடன் பேசியது என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார் சசிதரூர்.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி. இதே கோரிக்கையுடன் உரிமையியல்
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம்
மாநில அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் தீண்டாமை அதிகரித்த வண்ணம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு. தீண்டாமை விவகாரத்தில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .
10 நாள் அஞ்சலிக்கு பிறகு ராணி எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம்: உலகத் தலைவர்கள் நேரில் அஞ்சலி
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று அமெரிக்காவில் முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரான கேப்டன் அமரிந்தர்சிங் இன்று பாஜகவில் இணைகிறார்.
Background
சென்னையில் 121ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 121ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -