Breaking LIVE : உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன்: ரஷிய அதிபர் புதின்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் காணலாம்.
உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைபாடு குறித்தும் கவலைகள் பற்றியும் தான் அறிந்துள்ளதாகவும் இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புவதாக இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை அக்.26 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி வரை விடுமுறை; அக்.10ல் பள்ளிதிறப்பு
6-12ம் வகுப்புகளுக்கு அக்.5 வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு பின்னர் மீண்டும் அக்.6 ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 942 புள்ளிகள் சரிந்து 58,991 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 291 புள்ளிகள் குறைந்து 17,586 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
சில நேரங்களில் மின் கட்டணம் அரசியலாக்கப்படுகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு
குறைந்த மின்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் பேட்டி
சென்னையில் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 12.60 ஆக விற்பனையாகிறது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 39,792 ரூபாயாகவும், ஒரு கிராம் 4,974 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணியில் டைட்டல் பூங்கா அமைக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 5 ஏக்கரில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருகிறது தொடர்பாக தீவர கவனம் செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள் இருப்பதாகவும், குடும்ப ஆட்சி நடைபெறுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்ப்பில் போராட்டம்.செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர் அணையின் நீர்திறப்பு 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Background
சென்னையில் 118வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -