Breaking LIVE: நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 14 Sep 2022 05:44 PM
நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

நமது வரலாறை புரிந்து கொள்ள இந்தியை  கற்க வேண்டும் : அமித்ஷா

நமது கலசாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் - அமித்ஷா

குஜராத்தில் லிப்ட் அறுந்து விழுந்து  8 பேர் உயிரிழப்பு 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலி 

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு 

சிறார் குற்றங்களை தடுக்கவே சிற்பு திட்டம்  : முதலமைச்சர் 

சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்தாகவே இந்த சிற்பு திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை தீவரமாக கவனம் செலுத்தி வருகிறது -  முதல்வர் ஸ்டாலின் 

முல்லை பெரியாறின் 18ம் கால்வாயிலிருந்து  நீர்திறப்பு 

உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட முல்லைப்பெரியாறின் 18ம் கால்வாயிலிருந்து ஒரு போக பாசனத்துக்கு நீர்திறப்பு 

ஒரே நாளில் 5,108 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 5,108 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,10,057 ஆக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46,347 லிருந்து 45,749 ஆக குறைந்துள்ளது 


நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 31 பேர் இறந்ததால் பலி  எண்ணிக்கை 5,28,216 ஆக உயர்ந்துள்ளது : மத்திய அரசு 

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.61.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,608 விற்பனை செய்யப்படுகிறது


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,701க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 628 புள்ளிகள் சரிந்து 59,942 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது


தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 174 புள்ளிகள் குறைந்து 17,895 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது

பள்ளி கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 30 பேர் காயம் 

ஊதங்கரை அருகே தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் 

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டி: இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி: ஜெர்மனி வீராங்கனை தோல்வி

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் அன்கிதா ரெய்னா நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் ஜெர்மனி வீராங்கனையிடம் 6-0,6-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசனம்: முன்பதிவு செய்யும் புதிய ஆன்லைன் வசதி

சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் புதிய ஆன்லைன் வசதி விரைவில் அறிமுகம்.

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து..!

தமிழ்நாட்டில் 7 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

Background

சென்னையில் 116வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 116வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.





தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.