Breaking LIVE: சாம்பல் நிறத்தில் மாறிய கூகுள் லோகோ... காரணம் இதுதான்..
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் வெற்றி
நித்திரையில் இருந்தவர்கள் தற்போது ஒற்றுமைக்காக மாநாடு நடத்துகின்றனர் : புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை
Vandalur Zoo: நாட்டிலேயே சிறந்த பூங்காவாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு..
புதுக்கோட்டை நார்த்தமலை அருகே நெடும்பாறையில் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுக்க பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்
சாம்பல் நிறத்தில் மாறிய கூகுள் லோகோ... காரணம் என்ன? ராணி எலிசபெத்தின் மரணத்துக்காக வந்த மாற்றம்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் திருப்பூர், தேனி, திண்டுக்கல்,மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
இந்தியாவில் ஒரேநாளில் 5,076 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,95,359 ஆக அதிகரித்துள்ளது
திருக்குறளை அவமதித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை உயர்த்திய திமுக அரசு அதனை உடனே திரும்பப்பெற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்
இந்தியாவில் ஒரே நாளில் 5,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 4.44.95,359 ஆக உள்ளது.
நாடுமுழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48,850 லிருந்து 47,945 ஆக குறைந்துள்ளது. தொற்றிற்கு புதிதாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று 36வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடக்கம் : சுற்றுலாத்துறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது - சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி காவேரி பாலம் நள்ளிரவு 12 மணி முதல் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Background
சென்னையில் 113ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாள்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5உம், டீசல் விலை ரூ.10உம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 113ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர்.11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -