Breaking LIVE: மறைந்த தூரிகை கபிலன் குடும்பத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி நேரில் சென்று இரங்கல்..

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 10 Sep 2022 06:06 PM
Thoorigai Kabilan : மறைந்த தூரிகை கபிலன் குடும்பத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி நேரில் சென்று இரங்கல்..

கோவையில் சிவப்பு பவள பாறை பறிமுதல்

கோவையில் சிவப்பு பவளப்பாறையை விற்பனை செய்ய முயன்ற சாம்சன் என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வனிலை மையம்

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என  வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் ,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும் - நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

ரூ. 7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

மணப்பாறை அருகே பாலன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பறிமுதல்

நீட் தேர்வை தமிழ்நாடு மட்டும் தான் எதிர்க்கிறது -  அண்ணாமலை

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களை தவறாக வழிநடத்துகிறது - அண்ணாமலை

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு  மையமாக மாற்றவேண்டும் - பிரதமர் 

இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மையமாக மாற்ற ஒரே நேரத்தில் பலமுனைகளில் பணியாற்ற வேண்டும் : பிரதமர் மோடி 

மதுரையில் விதிகளை மீறிய 694 ஆட்டோ பர்மிட் ரத்து

விதிமீறிய 694 ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல்

இன்றைய வெள்ளி நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து ரூ.60.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ. 37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Breaking LIVE: சென்னை தீவுத்திடலில் அக்.11 முதல் பட்டாசுகள் விற்பனை 

தீபாவளியையொட்டி சென்னை தீவுத்திடலை அக்டோபர் 11 முதல் 25 ஆம் தேதி வரை பட்டாசுகள் விற்பனை :சுற்றுலாத்துறை அறிவிப்பு 

Breaking LIVE: தமிழ்நாட்டில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமல்

தமிழ்நாட்டில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

Breaking LIVE: மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனத்தில் தீ..

அரக்கோணம் அருகே உள்ள சேதமங்கலம் பகுதியில் மாணவர்களுடன் சென்று கொண்டுருந்த பள்ளி வாகனம் தீ பிடித்துள்ளது. பேருந்து உள்ளே இருந்த 4 மாணவர்களும் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Breaking LIVE: பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 

Breaking LIVE: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று முதல் தொடக்கம்..

உலக மல்யுத்த சாம்பியஷிப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்தியா சார்பில் பல்வேறு வீரர் வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர்.

Breaking LIVE: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. 

Breaking LIVE: காசநோய் ஒழிப்புத் திட்டத்தை தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர்

காசநோய் ஒழிப்புத் திட்டத்தை குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார்.

Breaking LIVE: கிழக்கு லடாக்கிலிருந்து 12ஆம் தேதிக்குகள் படைகள் வெளியேறும்-பாதுகாப்புத்துறை

கிழக்கு லடாக் பகுதியில் வரும் 12ஆம் தேதியுடன் படைகள் வெளியேற்றும் பணி நிறைவு பெறும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.

Breaking LIVE: முழு நேர படிப்பு நிகாரனது ஆன்லைன் படிப்பு.. நீதிமன்றம் அதிரடி

ஆன்லைன் படிப்புகள் திறந்தவெளி ஆகியவை முழுநேர படிப்பிற்கு நிகரானவை என்று நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்துள்ளது.

Breaking LIVE: திருப்பதி கோயிலில் பகதர்கள் தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருப்பு...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

Background

சென்னையில் 112வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 











கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.










- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.