Breaking LIVE : அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
மின்கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
போதைப்பொருள் இந்த அளவுக்கு பரவியதற்கு காரணமே ஒன்றிய அரசுதான் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
ஐஐடி, ஐஐஎம்-களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு
சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கான கட்டுப்பாடுகள், கரைக்கும் இடங்கள் குறித்த அறிவிப்பு .
சென்னை காவல் எல்லைக்குள் 1,352 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் காவல் சரக்கத்தில் 699 சிலைகளும் வைத்து வழிபாடு செய்ய அனுமதி
சென்னையில் காலையில் இருந்து விடாமல் கொட்டி தீர்த்த மழை நின்றது
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 950 புள்ளிகள் சரிந்து 58,589 புள்ளிகளில் வர்த்தகமாகிறது
மொத்தமுள்ள 62 ஆம் ஆதி எம்.எல்.ஏக்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்
சென்னையில் காலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது.
வெளிநாட்டு தொழில்களில் இந்திய நிறுவனங்கள் செய்யும் முதலீடு ஜூலையில் 50%க்கு மேல் சரிவு - ஆர்பிஐ
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
கலவையான விமர்சனங்கள் எழுந்ததால் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கம்
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். பெரியார் சிலை குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்
கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு. என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்கின்றன கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திமுக அறிவித்த தேர்தல்வாக்குறுத்திகளில் 70% நிறைவேற்றம்; எஞ்சிய 30% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் : முதல்வர்
விழுப்புரம், பிடாகம், முண்டியம்பாக்கம், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 44 ரூபாய் குறைந்து ரூ.4,710க்கு விற்கப்பட்டு வருகிறது.
ஒரு சவரன் தங்கம் 352 ரூபாய் குறைந்து ரூ.37,680க்கு விற்பனை செய்யப்படுகிறது
கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதித்துறை தகவல்.
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளங்கலை படிப்பில் இரண்டாம் ஆண்டில் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் உயர்கல்வித்துறை அறிவிப்பு.
Background
சென்னையில் 103வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -