Breaking LIVE : Pakistan vs Zimbabwe Live Score, T20 World Cup 2022: பாகிஸ்தான் அணியை ஒரு ரன்னில் வென்றது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி..

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 27 Oct 2022 08:14 PM
பாகிஸ்தான் அணியை ஒரு ரன்னில் வென்றது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி..

பாகிஸ்தான் அணியை ஒரு ரன்னில் வென்றது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி..

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு

 அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு 

கோவை கார் வெடிப்பு நடந்து 12 மணி நேரத்தில் இயல்புநிலை திரும்பியது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் -  அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபின் செந்தில் பாலாஜி பேட்டி 

 திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

திமுக அரசு தமிழ் மொழியை அழிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நல்ல கொசுக்கள் மூலம் கெட்ட கொசுக்கள் அழிப்பு 

கெடுதல் தராத கொசுக்கள், சுற்றுச்சுழலை காக்கும் கொசுக்களை கண்டறிந்து இதர கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன : தமிழக அரசு

தமிழக மீனவர்களின் படகை துளைத்த 47 குண்டுகள்

கடந்த 21 ஆம் தேதி தமிழக மீனவர்களை நோக்கி இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 47 குண்டுகள் படகை துளைத்துள்ளன

தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடி சதம்

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடியாக சதமடித்தார்

கோவை கார் வெடிப்பு - 6வது நபரை கைது செய்த காவல்துறை..!

கோவை உக்கடத்தில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் 6வது நபராக அஃப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியில் மழை - பள்ளிக்கு மட்டும் விடுமுறை..!

தூத்துக்குடியில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கையில் இன்று உள்ளூர் விடுமுறை..!

மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த விவகாரம் : இன்று நேரில் ஆஜராகிறார் சதீஷ்

மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான சதீஷ் வழக்கு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!

எல்லை தாண்டி கடலில் மீன்பிடித்ததாக விசைப்படகுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

டி 20 உலகக் கோப்பை தொடர்: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி நெதர்லாந்து அணியை சந்திக்கிறது. சிட்னியில் தொடங்கும் இந்த போட்டியானது மதியம் 12. 30 மணிக்கு தொடங்குகிறது. 

சென்னையில் மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 159வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.