Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; 5 வழக்குகள் பதிவு

Breaking News LIVE: நாடு முழுவதும் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 21 Dec 2024 11:34 AM
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; 5 வழக்குகள் பதிவு

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 

மதுரையில் மெட்ரோ வழித்தடம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

மதுரையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது 55வது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது 55வது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம். வரி விதிப்பில் மாற்றம் இருக்க வாய்ப்பு. 

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Background

* 55வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று ராஜஸ்தானில் நடக்கிறது; மருத்துவம், ஆயுள் காப்பீடு குறித்து முக்கிய முடிவு 
* கை கடிகாரம், ஷூ மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகரிக்க வாய்ப்பு 
* துணை வேந்தர் பதவி விவகாரம்; ஆளுநர் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை - உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் 
* நாடாளுமன்ற கூட்டக்குழு தலைவராக சௌத்ரி நியமனம் 
* கோவையில் தடையை மீறி பா.ஜ.க. பேரணி; அண்ணாமலை கைது - பெரும் பரபரப்பு 
* திமுக அரசு தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது; சீமான், திருமாவளவன் வாக்கு அரசியல் செய்கின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு 
*   தமிழ்நாட்டில் 26ம்  தேதி வரை மழை தொடரும்; அரியலூர், கரூர் , திருப்பூரில் மழை 
* தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு 
* மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை 
* வேலூர் அருகே ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை; பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை   
* மத்திய பிரதேசத்தில் கேட்பாரற்று கிடந்த காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல்; போலீசார் விசாரணை 
* நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகள் அபாயகரமானது இல்லை என கேரளா அதிகாரிகள் விளக்கம்;
* அபாயகரம் இல்லை என்றால் பின்னர் ஏன் தமிழ்நாட்டில் கொட்டினீர்கள் என நெல்லை ஆட்சியர் கேள்வி
* இரட்டை இலை தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் பதில் 
* வட தமிழகம் மீது முதலமைச்சருக்கு பாரபட்சம்; அன்புமணி குற்றச்சாட்டு 
* பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் - குவைத் மன்னர் அமைச்சர்களை சந்திக்கிறார் 
*   நெல்லையில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 கொலை; பீதியில் மக்கள் 
* மது போதையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டியா கும்பல்; கைது செய்த போலீஸ் 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.