Breaking LIVE : சில்லரை விலை பணவீக்க விகிதம் குறைந்தது - மத்திய அரசு அறிவிப்பு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம் 6.77 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுத்திருந்தால் ரூ.4000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதிப்பு அடைந்த சீர்காழி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்..
கடலூரில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.67,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், அடுத்த 2 மணி நேரத்தில்,
மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.39,208க்கு விற்பனையாகிறது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி மரியாதை செலுத்தினர்.
தொடர் மழையால் நெல், கரும்பு பயிர்கள் பாதிப்பு... விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் நெல், கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 17 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவெடுப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுப்பு - கடலூரில் மட்டும் இழுவைப் படகுகள், நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல அனுமதி
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா பயணம் ; உலக தலைவர்களுடன் பங்கேற்பு
சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய இருக்கிறார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேற்று விடுதலையான முருகன் சாந்தன் ஜெயக்குமார் ராபர்ட் ஆகியோர் 4 பேரை திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் இன்று நளினி தனது கணவர் முருகனை, தனது குடும்பத்துடன் நேரில் சந்திக்க உள்ளார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று இந்த 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி ,கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
Background
தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 177வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 177வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர் 14ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -