Breaking News Tamil LIVE: மேகதாது பற்றி கண்டிப்பாக விவாதிப்போம் - காவேரி மேலாண்மை ஆணையக் குழு தலைவர் திட்டவட்டம்

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Jun 2022 06:10 PM
Breaking News Tamil LIVE: மேகதாது பற்றி கண்டிப்பாக விவாதிப்போம் - காவேரி மேலாண்மை ஆணையக் குழு தலைவர் திட்டவட்டம்

ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்போம் என காவேரி மேலாண்மை ஆணையக் குழுவின் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த அவர், மேகதாது உள்ளிட்ட அணை விவரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு முழு உரிமை உள்ளதாக கூறியுள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு எனவும் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

Breaking News Tamil LIVE: ஓ.பன்னீர்செல்வம் தலைமை தான் வேண்டும்.... உ.தனியரசு ஆதரவு

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சித் தலைவர் உ.தனியரசு சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பது நல்லதல்ல என தெரிவித்தார். மேலும் அதிமுகவின் முழு அதிகாரத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தன்வசப்படுத்த வேண்டும் என தனியரசு கூறியுள்ளார். 

Breaking News Tamil LIVE: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்... ஓபிஎஸ்-இபிஎஸ் விலக முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் விலகிக்கொள்ள வேண்டும் எனவும், பதவிக்கு வேறு யார் வந்தாலும் பரவாயில்லை என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை சாதிக்கட்சி போல் மாற்ற வேண்டாம். 2 பேரும் சண்டையிட்டுக்கொள்வதால் கட்சி இரண்டாக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி மாணவர் அணி முன்னாள் பொருளாளர் சி . பாலகிருஷ்ணன் மனு

ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது - வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்

ஓ.பி.எஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அது செல்லாது - வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்

குடியரசுத் தலைவர் தேர்தல் : பாஜக மேலண்மை குழுவில் வானதி..

குடியரசுத் தலைவர் தேர்தல் : பாஜக மேலண்மை குழுவில் வானதி..

Agnipath : அக்னிபத்திற்கு எதிரான போராட்டம் : 200 ரயில்கள் பாதிப்பு..

அக்னிபத்திற்கு எதிரான போராட்டம் : 200 ரயில்கள் எரிப்பு..

திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரை

திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரை 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

ராஜஸ்தான் முதலமைச்சரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. அவர் சொந்தமாக நடத்தி வரும் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒதுங்கவேண்டும் - ஆறுக்குட்டி

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒதுங்கவேண்டும் - ஆறுக்குட்டி

தமிழ்நாடு : ஒற்றை தலைமை விவகாரம் : 4-வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை

தமிழ்நாடு : ஒற்றை தலைமை விவகாரம் : 4-வது  நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை

வலுத்த போராட்டங்கள்.. மாற்றத்தை கொண்டு வந்த மத்திய அரசு..

Background

ஒற்றைத்தலைமை 


அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்து வரும் சூழலில் சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், மாவட்ட செயலாளர்களோ, கட்சி நிர்வாகிகளோ தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சிகளின் விதிகளின்படி, அடிப்படை நிர்வாகிகள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு நான் தயார். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை.அதிமுகவில் இருந்தும், அதிமுகவின் தொண்டர்களிடம் இருந்தும் என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை.


ஒரு அறையில் பேச வேண்டிய 'ஒற்றைத் தலைமை' விவகாரத்தை அம்பலத்திற்கு கொண்டுவந்து பேசி விவாதம் ஆக்கியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியால்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினை பெரிதானது. மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர, தற்போது இந்த பிரச்சனை தேவையா..? என்று கேள்வி எழுப்பினார். 


நகமும் சதையுமாக உள்ள ஓபிஎஸ் இபிஎஸ்


ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி குரல் எழுப்பி வரும் நிலையில், ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல நகமும் சதையும் போல ஒன்றாக இருப்பதாக பொன்னையன் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 









கூட்டத்தில் இருந்து யாரும் கோபமாக வெளியேறவில்லை. அதெல்லாம் உங்கள் கற்பனை. சிவி சண்முகம் திருச்சி செல்லவேண்டுமென்பதால் கிளம்பினார். ஜெயக்குமார் ஒரு மீட்டிங்கில் இருந்து வந்தார். மீண்டும் கிளம்பி சென்றார். இரட்டைத்தலைமை தொடருமா என்பதே தேவையற்ற கேள்வி” என்றார்.


அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து, ஓபிஎஸ் இன்றைய தினம் கிரீன்வேஸ் சாலையில் முன்னதாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


விஷவாயு கக்கும் கேஸ் சேம்பர்


எதிர்க்கட்சிகளை அடக்குவது ஒடுக்குவதில் மத்திய  அரசு எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அடக்குமுறைகளை ஏவுவதில் மத்திய அரசு இன்னும் ஹிட்லரைப் போல் விஷவாயு கக்கும் கேஸ் சேம்பர் மட்டும் தான் அமைக்கவில்லை என்று விமர்சித்துள்ளது சிவ சேனா கட்சி.


மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக உத்தவ் தாக்கரேவும் துணை முதல்வராக கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் உள்ளனர். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதில் சிவ சேனா தவறுவதே இல்லை. அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அன்றாடம் ஏதாவது விமர்சனங்கள் வருவது வழக்கம். அப்படி இன்று சிவ சேனாவின் சாம்னா நாளிதழிலில் வெளியான தலையங்கத்தில் பாஜக ஆட்சியை ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பிட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.


அந்தத் தலையங்கத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு நினைத்தால் யார் காலரை வேண்டுமானாலும் பிடித்து இழுக்கும் என்று நிரூபித்துள்ளது பாஜக. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை மட்டுமே இதுவரை விமர்சித்து வந்தனர். இப்போது ஒட்டுமொத்த காந்தி குடும்பத்தின் நற்பெயரையும் ஒழிக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நடந்துள்ளது இனி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எதிரிகளை அழிப்பதற்கு ஹிட்லரைப் போல் விஷவாயு கக்கும் கேஸ் சேம்பர் மட்டுமே அமைக்கவில்லை. சிவ சேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி என யாரை வேண்டுமானாலும் சிபிஐ, அமலாக்கத் துறை விசாரிக்கும் ஆனால், பாஜகவினர் யாராவது ஒருவராவது இத்தகைய விசாரணை அமைப்புகளின் வளையத்திற்குள் வந்திருக்கின்றனரா? இல்லையே! அமலாக்கத் துறைக்கு தெரிந்தது எல்லாம், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், மாநில அமைச்சர் நவாப் மாலிக். திரிணமூல் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சிவ சேனாவில் சஞ்சய் ரவுத், அனில் பரப், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் ஆகியோரைத் தான் தெரியும். அப்புறம் எப்படி சட்டம் எல்லோருக்கும் இந்த நாட்டில் சமமானதாக இருக்கும். இவ்வாறு சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. 


நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு  மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சோனியா காந்தி ஆஜராகவில்லை. ராகுல் காந்தி மூன்று நாட்கள் ஆஜராகிவிட்டு அடுத்த சம்மனை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கக் கோரியுள்ளார்.
 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.