BREAKING LIVE: விடுதி சமையலர் தேர்வு  அறிவிப்பை ரத்து செய்தது செல்லாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 05 Jul 2022 04:23 PM
கட்சியை கெடுக்கும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு

செல்வாக்கையும் நம்பிக்கையையும் இழந்ததால் அதிமுக பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் தடை கோருகிறார்- ஈ.பி.எஸ்

நீதிமன்ற உத்தரவை லீனா மணிமேகலை மதிக்க வேண்டும்

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இயக்குநர் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என கவிஞர் லீனா மணிமேகலைக்கு அறிவுறுத்த நீதிபதி உத்தரவு 

தஞ்சை அருகே சிலைகள் பறிமுதல் - 2 பேர் கைது

தஞ்சை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 உலோக சிலைகள், 2 பாவை விளக்குகள் கைப்பற்றப்பட்டன

விடுதி சமையலர் தேர்வு  அறிவிப்பை ரத்து செய்தது செல்லாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ததற்கு தடை விதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்துள்ளது. தேர்வுக்குழுவின் பணி உரிய நபர்களை தேர்வு செய்வதே என்றும் அறிவிப்பை ரத்து செய்திருக்கக்கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. 

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு 

காவேரி நீர் மேலாண்மை ஆணையக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு..!

டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த காவேரி நீர் மேலாண்மை ஆணையக்கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக காவேரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. 

2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதி

2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு..!

11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுகுழுவிற்கு  எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. 

சென்னையில் கஞ்சா விற்ற 3 பேருக்கு 12 ஆண்டு சிறை..!

சென்னையில் ஆட்டோவில் 25 கிலோ கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மூவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து சிறப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, திருப்பூர், தேனி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

முழு அளவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - டி.ஜி.பி. அலுவலகத்தில் ஜெயக்குமார்

கடந்த பொதுக்குழுவுக்கு போல அல்லாமல் 11-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு முழு அளவில் பாதுகாப்பு அளிக்குமாறு டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பியிடம் மனு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி தமிழக டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். 

முன்னாள் மாணவராக வாழ்த்த வந்துள்ளேன் - மாநிலக் கல்லூரியில் முதல்வர் பேச்சு

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்று வரும் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றி வருகிறார். 

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்கப்போவதில்லை - ஓ.பன்னீர்செல்வம்

வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் முறையீடு

வரும் 11 ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாளை ஆனிதிருமஞ்சனம் நடைபெறவிருந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வழக்கம்போல தேரோட்டம் நடைபெற்று வருகிறது. 

அண்ணாமலை இன்று உண்ணாவிரதப் போராட்டம்...!

தி.மு.க. அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க. இன்று பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார். 

Background

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் அதிகமாக பதிவாகி வருகிறது.


இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.



 


கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுசுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் போன்ற வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.



 


ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வெளியில் செல்லும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.