Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்தடுத்து நடக்கும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள...

ABP NADU Last Updated: 03 Jul 2022 07:30 PM
தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காரைக்காலில் காலரா எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை

காரைக்காலில் காலரா நோய் எதிரொலியால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்க்ப்பட்டுள்ளது

மக்கள் பணி செய்ய வந்த எனக்கு முதலில் கிடைத்தது சிறை தான் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மக்கள் பணி செய்ய வந்த எனக்கு முதலில் கிடைத்தது சிறை தான்  என நாமக்கல்லில் நடந்து வரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.  

உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி- முதலமைச்சர் ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி என்பதை மறந்துவிட வேண்டாம் என, நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காரைக்காலில் காலரா பாதிப்பு - 2 பேர் உயிரிழப்பு

காரைக்காலில் காலராவால் பாதிப்பு பரவி வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால், புதுச்சேரியில் பொதுசுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்- 420 மெகாவாட் மின் உற்பத்தில் பாதிப்பு!

மேட்டூர் அனல் மின்நிலைய 3-ஆம் அலகில் பாய்லர் டியூபில் ஏற்பட்ட பழுதால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்புஏற்கனவே 2-ஆம் அலகில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்து: காணாமல் போன இரு மீனவர்கள் சடலமாக மீட்பு!

ராமநாதபுரம் மாவட்டம்  ஏர்வாடி அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல்போன இரு மீனவர்களுன் உடல் சடலமாக மீட்புநாட்டுப்படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கிய மீனவர்கள் மலைச்செல்வம், முனியசாமி உயிரிழந்துள்ளனர்.


 

மஹாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டே பொற்றுப்பேற்ற பின் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம்!

சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.வி.-ன் சார்பில் ராகுல் நர்வேகர் மற்றும் சிவசேனா கட்சியின் ராஜன் சால்வி போட்டியிடுகின்றனர்.

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்!

மியான்மரில் உள்ள யவாங்கன் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டேர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. 

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்..!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல் என புகார். 

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்று பணி ஆணை ரத்து..!

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்று பணி ஆணையை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு

கொரனா தொற்று அதிகரித்தால் ஆன்லைன் மூலம் அஇஅதிமுக பொதுக்குழுவை நடத்த திட்டம்!

கொரனா தொற்று அதிகரித்தால் ஆன்லைன் மூலம் அஇஅதிமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: இந்தியாவில் ஒரே நாளில் 16,103 பேருக்கு கொரோனா - மக்கள் அதிர்ச்சி

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  16,103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,502,429 ஆக உள்ளது. நோய் தொற்றுக்கு 31 பேர் பலியான நிலையில், இதன் எண்ணிக்கை  5,25,199 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 13,929 பேர் குணமடைந்ததன் மூலம் இதுவரை 4,28, 65,519 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,11,711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுக்கோட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் தம்பதியினர் பலி

விராலிமலை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவர் செல்வராஜ், மனைவி கல்யாணி ஆகியோர் உயிரிழப்பு 

மெரினாவில் குளித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

சென்னை மெரினா அருகே மயிலாப்பூர் நொச்சிநகரில் உள்ள கடலில் குளித்த பிளஸ் 2 மாணவன் நீரில் மூழ்கி பலி 

சென்னை தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - இருவர் பலி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார்  நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது..!

சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,512 கன அடியில் இருந்து 2,408 ஆக குறைந்தது. 

நெல்லையப்பர் கோயில் திருவிழா கொடியேற்றம்..!

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனி தேரோட்ட திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

மகளிர் ஹாக்கி : இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

உலகக்கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோத இருக்கின்றனர். 

பாஜக செயற்குழுவில் பிரதமர் மோடி இன்று உரை

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்த இருக்கிறார். 

உலகளவில் 55.39 கோடி பேருக்கு கொரோனா தொற்று..!

உலகளவில் இதுவரை 55.39 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 52.85 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய கொரோனா தொற்றால் இதுவரை உலகளவில் இதுவரை 63.60 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 

Background

தமிழகத்தில் பெட்ரோல்,  டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 43வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருட்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையை குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.