Breaking LIVE: அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்- இடம் ஒப்படைக்க உத்தரவு
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
அதிமுக அலுவலகத்தை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை அடுத்து, பசுமைவழிச்சாலையில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஒரு மாதம் தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது - உயர்நீதிமன்றம்
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கில் ஈபிஎஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியை புனரமைக்க திட்டம். இதை குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க உள்ளோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும். இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதணையில் கிடைத்த ஆவணங்கள் சரிபார்ப்பு. அவரின் வீட்டில் சிக்கிய ஆவணங்களை மதிப்பீடு செய்கின்றனர்.
புதுச்சேரியில் மேலும் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவுள்ள நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 1,276-ஐ எட்டியது.
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக ட்ர்பிள் ஜம்ப் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் நீக்கம். ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் நீக்கம்.
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள விராங்கனை தனலட்சுமி நீக்கம். ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் நீக்கம்.
உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் 2 துறை கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்கப்படும் - மா.சு
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெருவதே அரசின் இலக்கு. நீட் விலக்கு மசோதாவை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் - தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிக்கு ஒத்திவைப்பு.
மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய விரும்புகிறோம் : உச்சநீதிமன்றம்
தமிழகத்திற்கு முறையாக நீர் பங்கீடு அளிக்கபடுவதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம்.
கேரளாவில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாகிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை
தமிழகத்தில் அரசு ஒப்பந்தக்காரர்கள் 20 பேருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மெத்வதேவ் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். ரஃபேல் நடால் 3வது இடத்தையும், நோவக் ஜோகோவிச் 7வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி அதானி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் நிதி நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை. தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனை நடைபெற்றது.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.
அதிமுகவின் பொருளாராக திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டத்தை வங்கிகள் ஏற்றுள்ளதாக தகவல்.
தமிழ்நாட்டில் 3000 கோடி ரூபாய் மதிப்பலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.
Background
சென்னையில் 60வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -