Breaking LIVE: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் மாறுபட்ட கருத்து; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Breaking live: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 30 Aug 2022 08:38 PM
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் மாறுபட்ட கருத்து; நடவடிக்கை எடுக்க உத்தரவு

கனியாமூர் மாணவி மரண வழக்கில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உய்ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

சேலம் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1.6 லட்சம் கன அடியிலிருந்து, 1.7 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர்.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக அலுவலகம் மோதல் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் 64 பேர் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராகவும், தலா ரூ. 20,000 ரூபாய் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் நிபந்தனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

விநாயகர் சதுர்த்தி: 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சென்னையில் மொத்தம் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

25,000 வழக்குகளில்  இறுதி அறிக்கை தாக்கல்; தென் மண்டல ஐஜி-க்கு நீதிமன்றம் பாராட்டு

2011 முதல் 2021 வரை 65,000 வழக்குகள் பதிவான நிலையில், 2 மாதத்தில் 25,000 வழக்குகளில்  இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு தென் மண்டல ஐஜி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 

Breaking Live: 300 ஆண்டுகள் பழமையான 2 கடவுள் சிலைகள் சென்னையில் மீட்பு!

சென்னை அண்ணாநகரில் 300 ஆண்டுகள் பழமையான நடராஜர் மற்றும் மாரியம்மன் சிலைகளை சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 


ரகசியத் தகவலின்பேரில் சோதனை மேற்கொண்ட போது இந்த சிலைகளை உரிமையாளர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், 2 சிலைகளையும் சிலை கடத்தல்  தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

Breaking Live: 300 ஆண்டுகள் பழமையான 2 கடவுள் சிலைகள் சென்னையில் மீட்பு!

சென்னை அண்ணாநகரில் 300 ஆண்டுகள் பழமையான நடராஜர் மற்றும் மாரியம்மன் சிலைகளை சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 


ரகசியத் தகவலின்பேரில் சோதனை மேற்கொண்ட போது இந்த சிலைகளை உரிமையாளர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், 2 சிலைகளையும் சிலை கடத்தல்  தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

”பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்க விதி அனுமதிக்கிறது”- உணவுப் பாதுகாப்பு துறை

ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதி அனுமதிக்கிறது என உணவுப் பாதுகாப்பு துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு

கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

” புகழுக்கு களங்கம் விளைவிக்கவே அறப்போர் இயக்கம் புகார் கூறுகிறது”- ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இபிஎஸ் மனு

தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கவே அறப்போர் இயக்கம் புகார் கூறுவதாக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இவ்வழக்கை செப்டம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

மணீஷ் சிசோடியா வங்கி லாக்கரில்  சிபிஐ சோதணை 

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

புதுச்சேரியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

புதுச்சேரியில் ரூ13.08 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

India Covid Cases : இந்தியாவில், 5,439 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று

India Covid Cases : இந்தியாவில், 5,439 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று

நடிகை அமலா பாலுக்கு  பாலியல் தொல்லை - நண்பர்  கைது

ஆரோவில் அருகே உள்ள வீட்டில் நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர் கைது செய்யப்பட்டார். நடிகை அமலா பால் அளித்த புகாரில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஆண் நண்பரை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கட்டை ராஜாவின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!

கொலை வழக்கில் ரவுடி கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டையாக குறைத்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை. கட்டை ராஜாவின் கூட்டாளிகள் ஆறுமுகம், செல்வம் ஆகியோரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.கும்பகோணம் சென்னியம்ங்கலத்தில் செந்தில்நாதனை 2013-ல் கொலை செய்த வழக்கில் கட்டை ராஜாவுக்கு தூக்கு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெ.தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணமில்லை -  மாதவன் 

மனைவி ஜெ.தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை; அதற்கான அவசியமும் இல்லை : கணவர் மாதவன் 

பாபர் மசூதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது!

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒன்றை மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து

ஓமலூர் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் தனியார் பள்ளிப் பேருந்து மாணவர்களுடன் சிக்கிக் கொண்டது

Breaking LIVE:இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து  38,320 ரூபாயாகவும், கிராமுக்கு ரூ.25  உயர்ந்து ரூ.4,790 விற்பனையாகிறது. 

முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்

முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டில் மின்சாரம் தாக்கி 10 மாடுகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு செய்யூர் தேவராஜபுரத்தில் வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்சார வயர்களில் இருந்து மின்சாரம் தாக்கியதில் 10 மாடுகள் பரிதாபமாக பலியானது.

Background

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின்படி, மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதி. 2 முறை உடற்கூராய்வு செய்ததில் தமிழக மருத்துவ குழு எடுத்த முடிவுகளை ஜிப்மர் மருத்துவ குழு ஏற்றுக்கொள்கிறது. மாணவி எழுதிய தற்கொலை கடித்ததின் படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


மேலும், மகளின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை அல்லது கொலை என பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் அடிப்படையில் மாணவி வேதியியல் பாடத்தில் சிரமப்பட்டுள்ளார் என தெரிகிறது. இரு ஆசிரியைகளும் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரமில்லை. 


போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததும் தவறு. நன்றாக படிக்க சொல்வது ஆசிரியர் பணியின் ஒரு கடமையே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். 


இரத்தக்கறை : 


இறந்தவரின் வலது மார்பகத்தில் காணப்படும் அடையாளத்தைப் பொறுத்த வரையில், அவள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தரையைத் தொட்டபோது ஏற்பட்ட சரளைக் காயங்களால் இது நடந்திருக்கும். உள் ஆடைகளில் உள்ள இரத்தக் கறையைப் பொறுத்தவரை, இது சுற்றியுள்ள முதுகெலும்பு தசைகளில் இரத்தத்தின் ஊடுருவல் காரணமாகும், எனவே இரத்தத்தில் இருந்து ஒரு கசிவு ஏற்பட்டது மற்றும் அது அவரது உள் ஆடைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் அவரது அந்தரங்க பாகங்களில் காயங்கள் எதுவும் இல்லை. படிக்கட்டுக்கு அருகில் மூன்றாவது மாடியில் காணப்படும் சிவப்பு நிறக் குறி இரத்தக் கறை அல்ல. இது நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு சிவப்பு நிற பெயிண்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, கூறப்படும் சம்பவம் 12.07.2022 அன்று இரவு நேரத்தில் நடந்தது, அதே நாளில், Cr.P.C பிரிவு 174 இன் கீழ் முதல் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையை இரண்டாவது பிரதிவாதிக்கு மாற்றிய பிறகு, எஃப்ஐஆர் ஐபிசியின் பிரிவு 305 மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2002 இன் பிரிவு 75 மற்றும் தமிழ்நாடு பிரிவு 4(பி)(ii) ஆகியவற்றின் கீழ் குற்றமாக மாற்றப்பட்டது. பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம், 2002 எதிராக WEB COf5 குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் 18.07.2022 அன்று தற்கொலைக் குறிப்பின்படி கைது செய்யப்பட்டனர்.


ஆசிரியர்கள் : 


மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களாலும் அந்தந்தப் பெற்றோரிடமிருந்தும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான நிலை. மாணவர்களை நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்தியதற்காக மனுதாரர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. தற்கொலைக் குறிப்பில் கூட, மனுதாரர்கள் இறந்தவர் இறப்பதற்கு முன் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.


மேலும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நன்றாகப் படிக்கச் சொல்லி, வழித்தோன்றல் அல்லது சமன்பாட்டைச் சொல்லும்படி மாணவர்களை வழிநடத்தினால், அது கற்பித்தலின் ஒரு பகுதியாகும், அது தற்கொலைக்குத் தூண்டுதலாக இருக்காது. எனவே, ஐபிசியின் 305வது பிரிவின் கீழ் உள்ள குற்றம் மனுதாரர்களுக்கு எதிரானது போல் ஈர்க்கப்படவில்லை. இருப்பினும், படிப்பில் சிரமத்தை எதிர்கொண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு இந்த நீதிமன்றம் வருந்துகிறது. இது எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.